சூறைச் செடியின் கீழே - நீ
சுருண்டு படுத்தது போதும்!
பாறை இடுக்கின் பின்னே - நீ
பயந்து ஒளிந்தது போதும்!
எழுந்து பார்!
பாரெங்கும் பாகால்!
உறக்கத்தை விடு
வேத வசனமெனும்
உறைவாளை எடு!
மகிமை தேவனின்
மெல்லிய சத்தம்
செவியிலும், மனதிலும்
சில்லென்று பட்டும்
குகையில்-
இன்னுமா உறக்கம்!
எலியாவே எழுந்திரு!
புலியாய் நீ புறப்படு!
- திரு. தானியேல் தமிழ்வாணன்