சிந்திக்கும் காலமல்ல - இது
செயல்படும் காலம்
உறங்கும் காலம் அல்ல - இது
விழித்தெழும்பும் காலம்.
இருளில் நடக்கும் காலம் அல்ல - இது
ஒளியில் நடக்கும் காலம்.
சாட்சி கூறும் காலம் அல்ல - இது
சாட்சியாய் வாழும் காலம்.
இரத்த சாட்சிகளைப் பார்க்கும் காலம் அல்ல - இது
இரத்த சாட்சிகளாக மாறும் காலம்.
இழி பொருளுக்குப் பணம் செலுத்தும் காலம் அல்ல - இது
ஆத்தும ஆதாயத்துக்கு பணம் செலுத்தும் காலம்.
ஆக - தேவனை விட்டு ஓடும் காலம் அல்ல - இது
பாவத்தை விட்டு ஓடும் காலம்!
- நவரத்தினம்