புதிய ஏற்பாட்டை வாசிக்க கூடிய விதம்!
Dr. செல்வின்

நீங்கள் இதை வாசிக்கும் ஏதோ ஒரு வார்த்தையோ, வசனமோ, வாக்கியமோ அல்லது ஒரு பகுதியோ உங்கள் உள்ளத்திற்கு ஆறுதலை அளித்திருக்கலாம். உங்கள் உள்ளத்தில் உணர்வை ஏற்படுத்திருக்கலாம். உங்கள் மனதில் வெளிச்சத்தையும் தெளிவையும் கொடுத்திருக்கலாம். அப்படி ஏதேனும் இருத்தால் தயவு செய்து எங்களுக்கு எழுதுங்கள்..தொடர்த்து உங்களுக்கு ஆலோசனைகளை எழுத ஆவலுடன் காத்திருக்கிறோம் கர்த்தராகிய இயேசு உங்களை ஆசிர்வதிப்பாராக!

புதிய ஏற்பாட்டில்:
   27        புத்தகங்கள்
   260     அதிகாரங்கள்
   7957  வசனங்கள் உள்ளன.

நீங்கள் புதிய ஏற்பாட்டின் புத்தகங்களை வாசிக்கும் போது….

புதிய ஏற்பாட்டை நீங்கள் முதல் முறையாக வாசிப்பீர்களென்றால் முதலில் மாற்கு கவிசேஷத்தை வாசியுங்கள்.. ஒரு நாளைக்கு 2 அதிகாரங்கள் வாசித்தல் ஒரு வாரத்தில் வாசித்து முடித்துவிடலாம். அதன் பிறகு லூக்கா, மத்தேயு, யோவான் கவிசேஷங்களை வாசிக்கலாம்.. அல்லது வரிசையாக மத்தேயு கவிசேஷத்தில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக வாசிக்கலாம்.

முதலில் வாசிக்கும் போது எல்லாம் புதிதாக புரியாதது போல் தெரியலாம். ஊக்கம் இழந்துவிடாமல் தொடர்ந்து வாசியுங்கள் ஒரு அதிகாரத்தில் எதைப்பற்றி அல்லது யாரைப்பற்றி எழுதப்பட்டு இருக்கிறது?  என்று கண்டறியும் வகையில் கவனமாக வசியுங்கள் . ஒரு முறையாவது புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களையும் கிரமமாகவும் தொடர்ச்சியாகவும் வாசித்து முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வாசிப்பது நல்லது.

புதிய ஏற்பாட்டை நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு ஏதேனும் விளங்காமல் இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள் நாங்கள் உங்களுக்கு விளக்கத்தை எழுதியனுப்புகிறோம்.

 


Dr.Selwyn founder of Follow-up Ministries Trust, Oddanchatram ( India ), is a Bible Teacher and author of many christian books. Innovative and simplified bible teaching methods taught by him has helped many christians and non-believers alike to know more about God. He could be reached at 91-4553-240623.