ஒலிம்பிக் போட்டி
தரிசனச் சுடர்
We have to Understand

பார்சிலோனா நகரம்!.. அதிகாலை வேளையில் பலநாட்டு விளையாட்டு வீரர்களும் சுறுசுறுப்பாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்!.. தூரத்தில் தெரிகிறாரே.. அவர்தான் மைக்கேல் ஜான்சன்.. நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி வாகை சூடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வீரர்.

பலமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான்சனை சிலமாதங்களுக்கு முன்பு ரோம் நகரில் நடந்த ஒரு போட்டியில் பிராங்கி பிரடெரிக்ஸ் என்ற வீரர் தோற்கடித்தார். இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. தொடர்ச்சியாக ஜான்சன் பெற்று வந்த வெற்றிகளை அது தடுத்து நிறுத்திவிட்டது! பலரும் ஜான்சனின் திறமை குறைந்து விட்டது என்று எடைபோடத் தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் ஜான்சன் சோர்ந்து விடவில்லை. புது தைரியத்துடன் இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார். ரோமில் தன்னை எதிர்கொண்ட எதிர்பாராத தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல், ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான தகுதிபெறும்  ஓட்டத்தில் திறமையாக ஓடி இந்த ஒலிம்பிக்கில் நுழைந்திருக்கிறார்.

தோல்வி.. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உண்டு.. நினையாத நேரத்தில் நினையாத விதத்தில் நம்மைத் தாக்க கூடும்.

சோர்ந்து போக வேண்டாம்!  முன்னேறிச் செல்லுங்கள். "பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி... பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி தொடருகிறேன்."


Tharisana Sudar is a monthly magazine publised by Evangelical Students of India (UESI), which was founded in 1954. Their vistion is to evangelize post-matric students in India, nurture them as disciples of the Lord Jesus Christ, that they may serve Church and Society.