தாலந்துகளை அறிந்து கொள்ளுதல் ( பாகம்-2)
Rev.J.N. Manokaran
10 Marriage Killers

சென்ற இதழின் தொடர்ச்சி

மனித வள மேம்பாட்டு மேலாளரின் பணிகளில் ஒன்று நபர்களிடம் உள்ள திறமையை கண்டறிதல் ஆகும்.  மக்களினால் இயற்கையாகவே சில காரியங்களை சிறப்பாக செய்ய முடியும், அது அவர்களின் பெலனாக உள்ளது.  மற்ற காரியங்களையும் அவர்களினால் செய்ய முடியும். ஆனால் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்காது.

3. காட்சிவடிவாக

இவர்கள் காட்சி வடிவ படுத்துவதில் கெட்டிக் காரர்கள். இவர்கள் வடிவமைத்ததிலும், எதிர்கால சிந்தனையில் வல்லுனர்களாகவும் இருப்பவர்கள். மோசே இந்த ஆற்றலுடையவனாய் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் வழி நடத்தினவன். யோசுவா கூட இந்த ஆற்றல் உடையவனாய், நிலங்களை கோத்திரங்களுக்காக பிரித்தான். 

4. கலைகள் தெரிந்தவர்கள்

இவர்கள் கைவினைப் பொருட்களில் ஆயுதங்களை, நடனத்தை, ஒட்டத்தை மற்றும் நடிப்பை பயன்படுத்த கூடியவர்கள்.  இவர்கள் விளையாட்டிலும் சரீர அசைவிலும் சிறந்தவர்கள், இடம் விட்டு நகர விரும்புவார்கள் மக்களுடன் இணைவார்கள்.  எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை தேவன் விடுவித்த போது மோசேயின் சகோதரி மிரியாம் ஆடி பாடி நடனமாடினாள்.

5. இசைவடிவில்

இவர்கள் சப்தம், பாட்டு, தாளத்தை நினைவு வைத்தல் மற்றும் மெல்லிசை போன்றவற்றை பிடித்துக்கொள்வதில் சிறந்தவர்கள்.  இவர்கள் பாடுதல், வாசித்தல் மற்றும் இசையை கவனித்தலை விரும்புவார்கள்.  தாவீது ஒரு சிறந்த இசை வடிவமைகின்றவர், அவருடைய பாடல்கள் இஸ்ரவேலர்களினாலும் இன்றைக்கும் உள்ள கிறிஸ்தவர்களின் பிடித்தமான ஆராதனை பாடலாக பயன்ப்படுத்தப்படுகின்றது.

6. இன்டர்பர்சனல்/ சோசியல்

இவர்கள் மக்களை புரிந்துக்கொள்கின்ற, நடத்துகின்ற, ஒழுங்கு செய்கின்ற, தொடர்பு செய்கின்ற திறமை உடையவர்கள்.  இவர்கள் விரைவாக குழுவை அமைப்பார்கள், நண்பர்களை ஏற்ப்படுத்திக் கொள்வார்கள், குழுவுடன் இணைவார்கள். ஜான் பிராட்லி மற்றும் ஜே கார்ட்டி-யை பொறுத்தவரை இன்டர்பர்சனல் உறவு நிலையில் மூன்று வகைகள் உள்ளது:  பலதரப்பட்ட உறவுநிலை, பிரபலமான குழு உறவு நிலை மற்றும் ஒற்றை உறவு நிலை.  இவர்களின் கணக்கெடுப்பின்படி 15 சதவீதம் மக்கள் பலதரப்பட்ட உறவு நிலையிலும், 70 சதவீதம் அறிமுகமான குழு உறவிலும் மற்றும் 15 சதவீதம் மக்கள் ஒற்றை உறவு நிலையிலும் காணப்படுகின்றார்கள்.  வேதாகமத்திலிருந்து சில உதாரணமான தலைவர்கள் - அந்திரேயா ஒற்றை உறவுநிலை, தானியேல் அறிமுகமான குழு உறவுநிலை மற்றும் சாலமோன் பலதரப்பட்ட உறவுநிலை.

7. இன்டிராபர்சனல்/ தற்பரிசோதனை செய்தல்

இவர்கள் பொதுவாக உருதியான மனநிலை உடையவர்களாகவும், தனித்து சிறப்பாக செயல்படுகின்றவர்களாகவும் இருப்பார்கள்.  இவர்கள் சாதிப்பதற்காக உறுதியான தீர்மானத்துடனும் விடா முயற்சியுடன் இருப்பார்கள்.  இவர்கள் பிரதிபலிப்பார்கள், ஆராய்வார்கள், மதிப்பீடு செய்வார்கள்.  தீர்க்கதரிசி எரேமியா இந்த வகையை சேர்ந்தவர், அவருடைய புத்தகமான புலம்பல் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

விளைவுகள்

பல்வேறு மொழி திறமையுள்ள ஒருவர் செய்திகளை சேகரிப்பது அல்லது தொடர்புக் கொள்ளும் துறையில் சிறப்பாக பொருந்த கூடியவர்.  கணக்கிடுதல் அல்லது நியாயமான திறமையுள்ளவர்கள் கணக்கிடும் துறையில் சேவை செய்ய விரும்புவார்கள்.  காட்சி வடிவாக்கும் ஆற்றல் உடையவர்கள் திட்டமிடும் துறையில் தேவைப்படுவார்கள்.  சாPரப்பிரகாரமாக திறமையுடையவர்கள் மேளாளர்களாக தேவைப்படுகின்றார்கள்.  இசை திறமை உள்ளவர்களை ஆராதனை குழுவுக்கு தேவையாக உள்ளது.  சமுதாய மற்றும் இன்டர்பர்சனல் திறமை உள்ளவர்கள் வரவேற்பாளராகவும் விற்பனையாளராகவும் தேவைப்படுகின்றார்கள்.  ஆய்வு செய்கின்ற துறைக்கு இன்டிரோபர்சனல் திறமை உள்ளவர்கள் தேவைப்படுகின்றார்கள்.

நம்முடைய தாலந்தை புரிந்துக்கொள்வதின் மூலம் நம்முடைய தொழில் அல்லது ஊழியத்தில் சிறந்ததை செய்ய உதவுகின்றது.

 


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.

Social Share