பாரத்தை …!
அன்பு ஒளி
We have to Understand

என் தகப்பனார் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். என் தாத்தாதான் எங்கள் வம்சத்திலேயே முதன் முதலில் இயேசுவை நம்ப ஆரம்பித்தவர். என் தகப்பனாருக்கு இன்னும் கூடுதல் வைராக்கியம் 4 மணிக்கே முழங்காலில் நின்று ஜெபிப்பார். நான் 14 வயதிலேயே இயேசுவின் அன்பை அறிந்து அனுபவிக்க ஆரம்பித்தேன். கல்லூரியல் படித்தபோது நான்தான் Throw Ball அணியின் Captain  மற்றும் பல போட்டிகளிலும் பரிசு பெற்று வந்தேன். மாநில அளவில் பரிசுகள் பெறுவதற்குத் திட்டமிட்டு என் நேரத்தை செலவழித்து வந்தேன்.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, என்னுடைய நேரம் எல்லாம் விளையாட்டிலேயே கழிந்தது. கல்லூரியில் இயங்கி வந்த ஜெப குழுக்கூட்ட நேரங்களில் கூட நான் விளையாட்டு அரங்கில்தான் இருப்பேன். அந்நேரங்களிலெல்லாம் என் மனதில் சமாதானக் குறைச்சலும் ஓர் வருத்தமும் வளர ஆரம்பித்து. கல்லூரியில் பல விளையாட்டுகளில் கோப்பைகள் வாங்க வேண்டும் என்று நான் இரவு பகலாக முயற்சித்தேன். விளையாட்டே என் வாழ்கையான அமைத்து விட்டது. அப்படி விளையாடி வரும்போதெல்லாம், எனக்குள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது.

ஒரு நாள்.. என்னுடைய கல்லூரியின் சிற்றாலயத்தில் பேச வந்திருந்த ஓர் அக்கா “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;” (எ.பி.12:1) என்ற வசனத்தை கல்லூரி மாணவிகளாகிய எங்களுக்கு ஏற்றபடி தைரியமாய், தன் சொந்த அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டார்கள். “பாரமான எல்லாவற்றையும் தள்ள வேண்டும். பாவத்தையும் தள்ள வேண்டும். “ என்று மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

என் கல்லூரியில், நான் விளையாட்டுத் துறையில் முன் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை தேவையற்ற பாரம் (Unwanted weight) என்று தேவன் உணர்த்தினார். அது பாவமல்ல.. ஆனால் விசுவாசியாகிய எனக்கு என் அழைப்பின் ஓட்டத்தைத் தடை செய்யும் பாரம். என்று உணர்ந்தேன். என் விடுதிக்கு வந்தவும் இரவு உணவு சாப்பிட எனக்கு இடமில்லை. “நான் சாப்பிட வரவில்லை. ..” என்று என் அறை சினேகிதிகளிடம் சொல்லிவிட்டு என் அறையிலே தங்கிவிட்டேன். ஏபிரெயர் 12: 1 ஐ எடுத்து முழங்காலில் நின்று பலதடவை வாசித்தேன். அவ்வசனம் என் உள்ளத்தை எடைபோட ஆரம்பித்தது. மாலை ஜெப நேரங்களில் நான் விளையாட்டிற்கென்று நேரம். ஒதுக்கினதை தேவன் சரியில்லை என்று உணர்த்தினார். கண்ணீரோடு என் குறையை ஒத்துக் கொண்டேன். என் உள்ளத்தில் ஒரு புதிய மகிழ்ச்சி நிறப்பினது.

இன்று, நான் ஓர் தேவ ஊழியக்காரி.. சந்தோஷமான குடும்பம்.. ஐந்து பிள்ளைகள்… உன்னத ஊழியம்.. தேவன் நம்புகிற பாத்திரம்!

“சிமோனே இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?... யோவான் 21: 15

திருமதி ஷீலா ராஜன்


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'