தூயாதி தூயவரே
Bro.A.Stanley Chellappa
We have to run away from Sins

தூயாதி தூயவரே
உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின்
புகழ் பாட வேண்டும் - தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
...........

 

பள்ளித் தலைமை ஆசிரியரான திரு இராபர்ட்டிடம், “பாக்கிய நாதனுக்குச் சம்பளம் வரவில்லை. ஆகவே, அவரை வேலையிலிருந்து நீக்கி விடுவோம். அவருக்குப் பணிநீக்க உத்தரவு எழுதுங்கள்” என்று கூறினர் அந்த பள்ளியின் நிர்வாகிகள். திரு. இராபர்ட், பாக்கிய நாதனை மிகவும் நேசித்ததால், “ஐயா, என்னால் பாக்கிய நாதனுக்குப் பணிநீக்க உத்தரவு எழுத முடியாது. நீங்கள் வேண்டுமானால் எழுதி அனுப்புங்கள்”. என்று கூறிவிட்டு நேராகப் பாக்கிய நாதனின் வீட்டிற்கு வந்தார். “பாக்கிய நாதன், இனி நம்ம பள்ளிக்கூடத்தில் உனக்கு இடமில்லை. உன்னைப் பணிநீக்கம் செய்ய என்னை நோட்டீஸ் எழுதும்படிச் செனான்னார்கள். நான் எழுதாமல் வந்துவிட்டேன். விரைவில் உனக்குப் பணி நீக்க உத்தரவு வரும்”, என்று வருத்தத்துடன் கூறிச் சென்றார்.

பாக்கிநாதன் விரத்தியடைந்தவராய், ஒன்றும் பேமுடியாமல் மௌனமானார். துக்கம் அவர் தொண்டையை அடைத்தது. அவரது தாயார், “ஐயா! என் பிள்ளை தென்னாற்காடு மாவட்டதிலாவது ஒழுங்காய் வேலை பார்த்திருப்பான். அதையும் விட்டுவிட்டோமே. இப்போ என்ன செய்வது?” என அழுது புலம்ப ஆரம்பித்தார். அவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர்.

அன்றிரவு ஏழ்மை நிலையிலிருந்த தன் குடும்ப நிலையை எண்ணி, பாக்கியநாதனின் மனம் வாடியது. இரவு மணி பத்தைக் கடந்தது. வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டனர். பாக்கியநாதன் கட்டிலில் படுத்திருந்தவாரே ஆண்டவரை நோக்;கி, சத்தமின்றி ஜெபிக்க ஆரம்பித்தர். “ஆண்டவரே உம்மைப் பாட ஆரம்பித்திருக்கிறேன். ஏன் உயிருள்ளவரை உம்மைப் பாடினால் போதுமையா! குர்த்தாவே ! நீர் உலகத்தில் வாழ்ந்தபோது துன்பங்களைச் சகித்துக கொண்டதுபோல, எனது துன்பங்களைத் தாங்கிக்கொள்ள எனக்குப் பெலன் தாருமையா! பாடசாலையில் பணியாற்ற இடமில்லை என்று கூறிவிட்டார்கள். கொல்கொதா மலையில் மனந்திரும்பிய கள்ளனுக்குப் பரலோகில் இடமளித்தீரே அதுபோல பரலோகத்தில் எனக்கு ஒரு இடம் தாருமையா! ஏன்று கண்ணீர் விட்டு அழுது ஜெபித்தார்.

அப்பொழுது, “ஏன் நமது ஜெபத்தை ஒரு பாடலாக எழுதக்கூடாது? ஏன்ற ஓர் எண்ணம் உதிக்கவே, பாக்கியநாதன் பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு, ஒசையில்லாமல் சமையலறைக்குச் சென்று, ஜெபித்து, பாடலை எழுத ஆரம்பித்தார். அவ்வேலையில் தானே, அப்பாடலுக்கேற்ற இனிய ராகத்தையும் கர்த்தர் பாக்கியநாதனுக்குத் தந்தார். இவ்வாறு உருவானது தான் இந்த இனிமையான ஜெபப் பாடல்!

அதன் பின், பாக்கிய நாதனுக்குப் பணிநீக்க உத்தரவு எழுதாதபடி, ஆண்டவர் போதகரின் மனதில் கிரியை செய்தார். பாக்கிய நாதன் தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஆலயப் பாடகர் வரிசைத் தலைவரானார். நாளடைவில் அவரது ஆசிரியர் பணியும் நிரந்தரமானது. தேவனுக்கு நன்றி கூறிப் பல துதிப் பாடல்களைப் பாக்கிய நாதன் தொடர்ந்து எழுதினார்.

ஒரு முறை பாக்கிநாதனின் மூத்த சகோதரர். திரு சௌந்திர பாண்டியன் தன் தம்பியிடம் , “நான் நாகர்கோவில் மருத்துவமையிலிருந்தபோது பக்கத்திலிருந்த ஒரு ஆலயத்தில் ஒரு பாட்டுப் பாடினாங்க. பாட்டின் கருத்தும், ராகமும், ரொம்பப் பிரமாதம் தம்பி! நீங்களும் அப்படிப் பாட்டு எழுதுங்க” என்றார். “அது என்ன பாட்டு?” என பாக்கியநாதன்  கேட்க, உடனே அவர் இப்பாடலைப் பாடினார். ஆப்போது பாக்கிய நாதன் “அண்ணாச்சி உங்க தம்பிக்கு ஆண்டவர் தந்த பாட்டுதான் அது.” ஏன்று கூறினார். அதைக் கேட்டு ஆச்சரியத்துடன் மகிழ்ந்தார் அவரது அண்ணன்!

1980- ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலே, ஒருவர் பாக்கியநாதனின் ஆலயத்திற்கு, புதிதாக ஒரு இசைத்தட்டு அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்தார். ஆராதனை முடிந்தபின் அந்த இசைத்தட்டு ஒலிபரப்பப்பட்டது. அதில் சகோதரன் பாக்கியநாதனின் இப்பாடலும் இடம்பெற்றிருந்தது. சகோதரி ஹெலன் சத்யாவின் இனிய குரலில் தனது பாடலைக் கேட்டுப் பரவசமடைந்தார் திரு.பாக்கிநாதன்! அநேகரை ஆண்டவரிடம் வழிநடத்தும் பாடலாக மாறியது குறித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.

சகோதரன் பாக்கியநாதனும் தனது பாடல்கள் அடங்கிய பல ஒலிநாடாக்களை வெளியிட்டிருக்கிறார். . சகோதரன் பாக்கிய நாதன் “துதிமுழக்கம்’ இயேசுவின் ஊழியம்” என்ற திருப்பணியைக் குழுவாகச் செய்து வருகிறார். ஒரு முறை டோனாவூர் சேகர தோப்பூர் ஆலயத்தில் நற்செய்திப் பணிசெய்ய அழைக்கப்பட்டார். அவரது இசைமீட்கும் கலைஞர் குழு அன்று வராமல், ஊழியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆன்று ஆண்டவரிடம் பாரத்துடன் ஜெபித்தார். அவரது ஜெபத்திற்குப் பதிலாக, ஆண்டவர் சகோதரனின் மூன்று ஆண்மக்களையும் சிறந்த இசைக் கலைஞர்களாக மாற்றித் தந்திருக்கிறார்.

 


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com