உங்கள் இயற்கையான பண்பை அறிந்திருத்தல்-பாகம்-3
Rev.J.N. Manokaran
Nehemiah is an encourager

பொதுவாக கூற வேண்டுமென்றால், மனோத்தத்துவர்கள் பண்பை நான்கு முக்கிய ஆள்த்தத்துவங்களாக பிரிக்கின்றார்கள்.  டைனமிக், இன்ஸ்பெயரிங், ஸ்டேபில் மற்றும் காசியஸ் (Dynamic,Inspiring, Stable and Cautious) .சில கிறிஸ்தவ தலைவர்கள்  - யோசனையாளர்கள், உற்சாகப்படுத்துகின்றவர்கள், சாதனையாளர்கள் மற்றும ஊக்குவிப்பவர்கள் மோட்டி வேட்டர்ஸ் என்று பிரிக்கின்றார்கள் - ஒரு குழுவில் இந்த நான்கு வகையான ஆள்த்தத்துவமும் தேவைப்படுகின்றது.


அதிகம் ஆராய்ந்து செயல்படுகிறவர்கள்

இவர்களின் செயல்பாடுகள் ஒழுங்கும் கிரமமும் , பூரண நிலையும்(Completness), பகுத்து ஆராய்தலும்  நிறைந்து காணப்படும்.  இவர்கள் தீர்மானம் எடுக்க தாமதமாகும், காரணம் அவர்களை சுற்றியுள்ள பல்வேறு வாய்ப்புகளின் வழியாக அதை கவனமாக பார்த்து தீர்மானிப்பார்கள்.  இவர்கள் பொதுவாக ஆராய்ச்சி செய்வதை விரும்புவார்கள், பல்வேறு காரியங்களை ஆராய்ந்து பிறகு தீர்மானம் செய்வார்கள்.  இவர்களின் முக்கியமான பெலவீனம் காலம் தாழ்த்தலாகும்.
எஸ்தர் இந்த வகையான ஆள்தத்துவத்தை சேர்ந்தவர்.  இவர் மொர்தேகாயினால் சம்மதிக்க வைக்கப்பட்டு, பெரிய மாற்றத்தை வரவைக்க கூடிய தீர்மானத்தை எடுத்தாள். 

மோசேயின் ஆரம்பநிலை குணாதிசியமும் இதை போன்றதே.  இந்த வகை நபர்கள் சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்வார்கள்.  இவர்கள் ஆராய்வதிலும், காரியங்களை சேகரிப்பதிலும், மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதிலும் ஆர்வமுள்ளவர்கள்.  இவர்கள் தங்களுடைய ஊழியத்தில் அதிகமாக தீர்க்கதரிசிகளாக இருப்பார்கள்.  சில நேரங்களில் இவர்கள் பிசாசின் உதவியாளராக இருப்பார்கள்.  இவர்கள் அதிகமாக புள்ளி விவரங்களை சார்ந்தே இருப்பதினால், நம்பிக்கை இல்லாதவர்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.


ஊக்கம் அளிப்பவர்கள்
இவர்கள் மக்கள் மத்தியில் இருக்க விரும்புவார்கள். மக்கள் தொடர்பில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.  இவர்கள் தரிசனம் காணுகின்றவர்கள், சிறந்த காரியங்களை செய்யும்படி மற்றவர்களை தூண்டுகின்றவர்களாக இருப்பார்கள்.  பொதுவாக இவர்கள் அதிக புதிய காரியங்களை தொடங்குவார்கள் ஆனால் சிறந்த நிர்வாகம் செய்கின்றவர்கள் உடன் இருக்கும் போதுதான் இவர்களினால் அந்த காரியத்தை நிறைவாக செய்து முடிக்க முடியும்.  இவர்களின் பெலவீனம் மறதி.  இவர்கள் சிறந்த தொடர்பாளர்கள் மற்றும் எதையும் விற்க கூடியவர்கள்.  ‘மக்கள் செய்தி தாளை வாங்குவதில்லை, செய்தியை வாங்குகின்றார்கள்.  கண்ணாடியை வாங்குவதை பார்க்கிலும், தரிசனத்தை வாங்குவது சிறந்தது”.  மேலும் இவர்கள் பணம் திரட்டுவதிலும் சிறந்தவர்கள்.

நெகேமியா ஒரு சிறந்த ஊக்குவிப்பவர், இவர் மிகவும் மோசமான சூழ்நிலையிலும் எருசலேமின் அலங்கத்தை கட்டுவதற்கு இஸ்ரவேலர்களை குடும்பம் குடும்பமாக ஊக்குவித்தார்.  மக்களை திரட்டி, செயல் படுகிறவர்களாக மாற்றுவதில் இவர்கள் திறமையானவர்கள். 

(...தொடரும்...)


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.