ஜெபம் (பாகம்: 1)
Rev.J.N. Manokaran
Daily reading

கிறிஸ்தவர்கள் மத்தியில் ஜெபத்திற்கு மிக குறைந்த முன்னுரிமையே அளிக்கப்படுகின்றது.  அநேக நேரங்களில் ஜெபத்தின் வல்லமையை மக்கள் புரிந்துக் கொள்வதில்லை.  ஜான் என்கிற பெயரையுடைய ஒரு குடிக்காரனை குறித்த கதை ஒன்று உள்ளது, இவன் தன்னுடைய குடி பழக்கத்தினால் தன்னுடைய செல்வத்தையும் உடல் நலத்தையும் இழந்துவிட்டான்.  பல வருடங்களாக ஒரு போதகர் இவனுக்கு ஆலோசனை கூறி சோர்ந்து போய்விட்டார்.  ஒரு நாள் இந்த மனிதன் அந்த போதகரின் அலுவலகத்தை அனுகி பத்து ரூபாய் குடிப்பதற்காக கடன் கேட்டான்.  அவருக்கு ஒரு ஆலோசனை தோன்றியது, ‘சரி ஜான், நான் உனக்கு பத்து ரூபாய் கொடுகின்றேன் ஆனால் நீ இனிமேல் உன் வாழ்க்கை முழுவதும் ஜெபம் செய்யமாட்டேன் என்று வாக்குறுதி கொடு” என்று கூறினார்.  ஜான் இதற்கு உற்சாகமாக சம்மதித்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.  கடைக்கு போகும் வழியில் அவன் யோசிக்க தொடங்கினான்: எனக்கு உடல் சுகவீனம் வந்தால் நான் ஜெபிக்க முடியாது; என் குழந்தைகளுக்காக நான் ஜெபம் செய்ய முடியாது; என் மனைவி எதாவது நெருக்கத்தில் இருக்கும் போது அவளுக்காக நான் ஜெபம் செய்ய முடியாது.  நான் யாரை சந்திப்பது - பிசாசையா அல்லது போதகரையா?  அவன் தான் செய்து கொடுத்த வாக்குறுதியை முழுவதுவாக புரிந்துகொண்டதினால் அந்த போதகரிடம் திரும்ப சென்று, ‘நான் என் ஆத்துமாவை குடிக்காக விற்;க முடியாது.  இந்த பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினான்.  ‘இதை தான் நான் உனக்கு சொல்ல முயற்சி செய்தேன்.  குடிபழக்கத்தை விட்டு விட்டு, இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொள்” என்று போதகர் கூறினார்.  ஜான் மறுரூபமான மனிதனாக மாறிவிட்டான்.  ஜெபத்தின் மனத்துவத்தை அவன் உணர்வதற்காக போதகர் இந்த அதிர்ச்சி வைதியத்தை கொடுத்தார்.

 
வேதாகமத்தில் ஜெபத்திற்கான அநேக மாதிரிகள் உள்ளது.  வேதாகமம் முழுவதிலும் தேவனுடைய ஊழியகாரர்கள் தேவனுடன் தொடர்புக்கொள்வதற்கும் ஐக்கியத்திற்கும் ஜெபத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.  ஜெபம் என்பது ஒரு மூலக்கூரோ அல்லது மந்திரமோ அல்லது தந்திரமோ அல்ல ஜீவனுள்ள தேவனுடன் ஐக்கியம் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட தெய்வீக ஈவாகும்.  தேவன் ஜெப வீரர்களுடன் சேர்ந்து பணி செய்வதையே அதிகம் விரும்புகின்றார்.

 
மோசே ஒரு சக்திவாய்ந்த தலைவராக காணப்பட்டார்.  தேவனோடு அவர் வைத்திருந்த உறவிலிருந்து பெலத்தையும் அதிகாரத்தையும் பெற்றிருந்தார்.  பத்து கட்டளையை பெறுவதற்காக அவர் நாற்பது நாள் இரவும் பகலும் தேவனோடு செலவிட்டார்.  அவர் அந்த கற்பனை பலகையை உடைத்த போது மீண்டும் நாற்பது நாள் உபவாசம் ஜெபம் செய்தார்.  இயேசுவும் கூட தன்னுடைய ஊழியத்தை தொடங்குவதற்கு முன்பு நாற்பது நாள் உபவாசத்துடன் ஜெபம் செய்தார்.  தேவனோடு நீண்ட நேரம் உபவாசம் மற்றும் ஜெபத்தில் இருப்பது மூலம் ஆவிக்குரிய பலத்தையும் அதிகாரத்தையும் பெறலாம்.

 
நெகேமியா ஒரு சிறந்த தலைவர், தேவனுக்காக சிறந்த காரியங்களை செய்தார்.  ஜெபத்திற்கான காரியங்களை நெகேமியா பயன்படுத்தியதைப் பார்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. (நெகேமியா 2:4, 5)  அயல் நாட்டில் சூசாவின் அரண்மனையில் நல்ல பதவியில் வகித்து தன்னையும் தன் குடும்பத்தையும் நன்கு பராமரித்துக் கொண்டு எதை குறித்தும் கவலைப்படாமல் அவர் இருந்திருந்தார்.  அவருடைய சகோதரன் அனனியா அவரை பார்பதற்கு யூதாவுக்கு வந்தார்.  எருசலேமின் நிலையை குறித்து அவன் கூறியது நெகேமியாவின் உள்ளத்தை அசைத்தது.  தகவல்கள் கூறப்படும் போது, தேவனுடைய மக்களின் உள்ளத்தில் பாரத்தை அது உருவாக்க கூடியதாக உள்ளது.  அனனியாவினால் கூறப்பட்ட தகவல்கள் மூலம் நெகேமியாவின் உள்ளத்தில் பாரம் ஏற்பட்டது.  எருசலேம் பட்டத்தைக் குறித்து நெகேமியாவின் உள்ளத்தில் பாரம் ஏற்பட்டது.  பாரமானது அவருடைய உணர்ச்சியை து}ண்டியது.  அவர் அழுதார், துக்கம் கொண்டார் மற்றும் உபவாசம் இருந்தார்.  நெகேமியா சுருக்கமாக ஜெபிக்கிறவராக இருந்தார்.  ‘பரலோகத்தின் தேவனிடத்தில் ஜெபித்து ராஜாவுக்கு பதில் அளித்தேன்”... இராஜாவின் சமூகத்தில் இருந்த போதும், கட்டிடத்தை கட்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதும், குதிரையின் மேல் பிரயாணம் செய்யும் போதும் அவன் பரலோகத்தின் தேவனிடம் சுருக்கமாக ஜெபித்தார்.  நெகேமியா 4: 4-5 மற்றும் 5:19 அவருடைய ஜெபம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர் எருசலேமின் அலங்கத்தை கட்டுவதற்கு முன்பு அநேக முறைகள் அதிக நேரம் தேவனுடைய சமூகத்தில் உபவாசத்தின் மூலம் தன்னை ஆயத்தப்படுத்தியிருந்த போதும், அலங்கத்தை கட்டும் போதும் அவ்வப்போது சுருக்கமான ஜெபத்தை செய்கிறவராக இருந்தார்.


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.