பார்சிலோனா நகர ஒலிம்பிக் மைதானத்தில் தங்கள் நாட்டுக் கொடிகளை உடலில் ஏற்றிக் கொண்டு 4 அமெரிக்க வீரர்கள் வெற்றி ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தனர். சிரித்த முகத்துடன் கூட்டத்தை நோக்கிக் கையசைத்த வண்ணம் நடுவில் ஓடிவந்தவர் கார்ல்லீவி!! இந்த ஒலிம்பிக்கின் ஹீரோ அவர்தான் மூன்று ஒலிம்பிக் பந்தயங்களில் தொடர்ச்சியாகப் பதக்கம் வென்று புதிய சகாப்தம் படைத்தவர். சுகவீனம் காரணமாக, பெருமைபெற்ற 100 மீட்டர் பந்தயத்தில் தகுதிவெறக் கூட அவரால் இயலவில்லை. நீளம் தாண்டுதல் போட்டியை மட்டுமே நம்பி இந்த ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டார். அவருடைய கனவுகளெல்லாம் தவிடு பொடியாகி விட்டதா? பார்சிலோனா வந்தபிறகு யாருமே எதிர்பார்க்காத வகையில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஓடும்படி அழைக்கப்பட்டார். சுகவீனமுற்ற இன்னொரு வீரருக்குப் பதிலாக இவர் சேர்க்கப்பட்டார். முடிவு? புதிதாக ஒரு சாதனையைப் படைத்து விட்டு தன் நாட்டுக்குத் தங்கப் பதக்கத்தையும் வாங்கித் தந்துள்ளார். நாம் நினைத்தது நடக்காவிட்டால் சோர்ந்து போகத் தேவையில்லை. தேவன் அதையே நன்மையாக மாற்றித் தருவார்.
|