தூக்கம்
திருமதி ஜேசுபாதம்
Reaching out people

அன்று காலை உறவினர் ஒருவரின் இறப்புக்குப் போக வேண்டியிருந்ததால் என் மகனை எழுப்பி, காப்பியை கையில் கொடுத்து,
  
“பாத்ரூம்ல தண்ணி வச்சிருக்கேன், போய் குளிச்சிட்டு சீக்கிரம் ஸ்கூலுக்கு போ, புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கியான்னு செக் பண்ணிக்கோ! டிபன் டேபிள்ல வச்சிருக்கேன். சாப்பிட்டு சீக்கிரம் போ” என்று நாலுதடவையாவது சொல்லியிருப்பேன். ஏனெனில் என் மகன் தூக்கத்தில் மன்னன், எவ்வளவு சொல்லியும் மாறவேயில்லை. அவன் தூங்கிவிடக்கூடாது என்ற பயத்தில் அத்தனை முறை எச்சரித்துவிட்டுப் போனேன்.
  
வீடு திரும்பிய போது என் வேலைக்காரம்மா வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
 
“எங்கம்மா போனீங்க? எவ்வளவோ நேரமா பெல் அடிச்சேன். பக்கத்து வீட்ல சாவி குடுத்தாங்களான்னு கேட்டேன், இல்லன்னு சொல்லிட்டு, வந்து ஜன்னல்ல எட்டி பாத்துட்டு தம்பி தூங்குதுன்னு சொன்னாங்க. ரொம்ப நேரம் கழிச்சிதான் கதவ தெறந்துச்சி” என்றாள். திடுக்கிட்டேன் நான் பயந்த மாதிரியே ஆகியிருந்தது. எல்லாம் சரியாக எடுத்துக் கொண்டு போனானோ தெரியவில்லையே! இன்று பாட்டனி பிரக்டிகல் டெஸ்ட் ஆச்சே என்று எண்ணிக் கொண்டே பயத்துடன் ரூமில் தேடினேன். பாட்டனி ரெக்கார்டு நோட்டு கட்டிலிலே இருந்தது.
  
டெஸ்ட் எழுத விட்டிருக்கமாட்டாங்களே! இந்நேரம் முடிந்திருக்குமே என்று வேதனைப்பட்டேன்.
  
மாலையில் என் மகன் கவலையோடு வந்தான். “சாரி மம்மி நீங்க போனதும் மறுபடி தூங்கிவிட்டேன். ஸ்கூலுக்கு நேரமாயிட்டதால் போற அவசரத்துல ரெக்கார்டு நோட்ட விட்டுட்டு போயிட்டேன் என்ன டெஸ்ட் எழுதவிடல” என்று சொல்லி அழுதான்.
  
இந்நேரம் எதுவும் திட்டக் கூடாது என்று எண்ணி சாலமோன் ஞானி தூக்கத்தைப் பற்றி எழுதியிருப்பதையெல்லாம் வேதத்திலிருந்து கூறினேன்.

(நீதி 6:9,10,11) சோம்பேறியே நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்! எப்போது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்….உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலவும் வரும்.


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.

Social Share