கேள்வி-பதில் பகுதி
கேள்வி
நான் ஒரு நாள் தெரியாத்தனமாக, 15 வயதுள்ள என் மகளின் தலை பின்னலை, கேளி செய்து விட்டேன். ஒரு மணி நேரம் அதைப் பற்றி நினைத்து அழுது கொண்டிருந்தாள். மிகவும் தர்மசங்கடமாய் போய் விட்டது. இது மாதிரி சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?. மகளின் சோர்ந்து போகின்ற நிலையை எப்படி சரி செய்வது?
தங்களின் சகோதரி ரூத் லூக்கோஸ், பனைமேடு
புதில்
அன்புள்ள சகோதரி
நீங்கள் உங்கள் 15 வயதுள்ள மகளின் அடிக்கடி சோர்ந்து போகின்ற நிலையை எப்படி சமாளிப்பது என்பதை அறிய எடுத்த முயற்ச்சிககு என் பாராட்டுகள்,
முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் 15 வயது மகளின் வளர் இளம் பருவம் (adolescents). அதில் ஒன்று, அவர்கள் தங்கள் மேல் மிகவும் அக்கறை செலுத்த ஆரம்பிப்பது. அதிக நேரம் கண்ணாடி முன்னால் நின்று தங்களை ரசிப்பார்கள். சுய மரியாதை சரீர அழகு. சுதந்திரமாக செயல்பட முயற்சிப்பது போன்றவை அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, அவர்கள் எதிர்பார்க்கின்ற இந்த காரியங்கள் தங்கள் வாழ்க்கையில் கிடைகக்hத பட்சத்தில் அவர்கள் தனிமை உணர்வுடனோ, தாழ்வு மனப்பான்மையுடனோ, சோர்வாகவோ, கவலையாகவோ, கோபமாகவோ, விவரிக்க முடியாத மனநிலை மாற்றங்கள் உடையவர்களாகவோ இருப்பார்கள். இது எல்லா வளர் இளம பருவனத்தினருக்கும் பொதுவாக ஏற்படக் கூடியது தான். ஆனால் இது அடிக்கடி கட்டுப்படுத்த முடியாமல் ஏற்படுமாயின் கவனம் தேவை
உங்கள் மகள் ஒரு வேளை தன் சரீர அமைப்பைக் குறித்து தாழ்வு மனப்பான்மையுடன் இருந்திருக்கலாம். தாயாகிய நீங்களே அவள் கேலி செய்ததை அவளால் தாங்க முடியவில்லை பொதுவாக பெண் பிள்ளைகள் தங்கள் கோபத்தையோ, சோர்வையோ அழுது வெளிப்படுத்துவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது
1.முதலாவது, நீங்கள் உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற ஞானத்தை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
2.உங்கள் மகளின் பிரச்சனைக்கு நீங்கள் காரணமல்ல, ஆகவே நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.
3.நீங்கள் பதட்டப்படாமல் சாதாரணமாக உங்கள் மகளின் இந்த பருவத்தை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.
4.அவள் சரியான மனநிலையில் இருக்கும் பொழுது. அவளிடம் நீங்கள் கேளி செய்த போது அவள் மனநிலை எப்படி இருந்தது ஏன் அழுதாள் என்பதை கேட்டு அவள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கேளி செய்தது அவள் புண்படுத்தியிருக்குமானால் அவளிடம் மன்னிப்பு கேளுங்கள்.
5.அவளிடம் நேரம் செலவழித்து நல்ல தோழியாக அவள் சொல்வதை எல்லாம் கவனித்து கேளுங்கள்.
6.அவள் கிறிஸ்துவுக்குள் யார் என்பதை வேதத்தின் அடிப்படையில் தெளிவு படுத்துங்கள், அவளோடு சேர்ந்து ஜெபியுங்கள்.
7.அவளுக்கு அன்பும் ஏற்றுக் கொள்ளுதலும் மரியாதையும் தேவை பெற்றோராகிய நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
இப்படிக்கு
அன்பு சகோதரி
Y.ஹெலன் ஜேக்கப்
பெண்கள் மற்றும் குடும்ப ஆலோசகர்
YMAM
( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)