நற்செய்திப் பிரசங்கியான டாக்டர். பில்லி கிரஹாம் ஒருமுறை பெரிய கூட்டத்தில் பேசுவதற்காகத் தன் காரில் சென்று கொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த மைதானத்தின் அருகே வந்தபோது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்த்தவுடன் என் பேச்சைக் கேட்க எவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள்! என்ற பெருமிதம் அவர் உள்ளத்தை ஆட்கொண்டது.
ஆண்டவர் உடனே அவருடன் பேசினார். ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை அவர் எடுத்துக் கொள்ள முயல்வதை உணர்த்தி, அவரது சுய பெருமையைச் சுட்டிக் காட்டினார்.
பில்லிகிரஹாம், தான் டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு மீண்டும் போகச் சொன்னார். டிரைவருக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டம் ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தன. பில்லி கிரஹாம் தன் நிலையை பெருமையை அறிக்கையிட்டு ஆண்டவருடன் ஒப்புரவாகிக் கொண்ட பின்னரே கூட்டத்துக்கு வந்து பேசினார்.
`நமக்கென ஏதேனும் தகுதி இருந்தால், அது கிறிஸ்துவினால் வருவதே’