குற்றம் செய்ததாகக் கண்டு பிடிக்கப்பட்ட போர் வீரன் ஒருவன் மாவீரன் அலெக்சாண்டர் முன் கொண்டு வரப்பட்டான். விசாரணை முடிந்;ததும், உலகத்தையே வென்ற அந்த பேரரசன் போர் வீரனைப் பார்த்து “ “உன் பெயர் என்ன?” என்று கேட்டபோது? ‘அலெக்சாண்டர்’ என்ற பதில் வந்தது.
இரண்டாம் மூன்றாம் முறை கோபத்துடன் பேரரசன் அந்த கேள்வியைக் கேட்டபோது அதே பதில் தான் வந்தது. அரசன் அவனைப் பார்த்து உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய தண்டனையை நீ அனுபவிக்க வேண்டும். உன் பெயரை மாற்றிக் கொள் இல்லாவிட்டால் உன் நடக்கையை மாற்றிக் கொள் “அலெக்சாண்டர்” என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒருவனும் உன்னைப் போல குற்றம் செய்து கொண்டிருக்க முடியாது” என்றான்.
ஒரு மனிதனாகிய அலெக்சாண்டருக்கு தன் பெயரைச் கொண்ட மற்றவன் குற்றம் செய்யும் போது வருத்தம் ஏற்பட்டால் இயேசுகிறிஸ்துவின் பெயரைக் கொண்ட நம்முடைய வாழ்க்கை தவறும்போது அவர் உள்ளம் எப்படி வருந்தும்!
“Would you want Christ to represent you in the same way that you represent Him?”