கேள்வி
எங்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு நாளாக எங்கள் திருமண வாழ் க்கை நன்றாகத் தான் போய் கொண்டிருந்தது. ஆனால் நான்கு மாதங்களாக என் மனைவி மிகவும் மாறுபட்டிருக்கின்றதை உணர்கிறேன். 1 மாதத்திற்கு முன், எங்களுக்குள் பெரிய வாக்குவாதம். அதிலிருந்து என்னுடன் பேசுவது நிறுத்தப் பட்டுவிட்டது. இது ஏதாவது ஒரு விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ என்று பயமாக இருக்கின்றது. இதிலிருந்து மீள ஏதாவது ஒரு வழிசொல்லுங்களேன்.
பதில்
தாங்கள் கேட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி மாத்திரமல்ல பலர் பாதிக்கப்பட்டிருக்கிற ஒரு பகுதி என்று உணர்ந்து இந்த கேள்வியை கேட்ட உங்களை நான் வாழ்த்துகிறேன்.
அவள் அப்படித்தான் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்ற எண்ணம் இல்லாதபடி நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இதிலிருந்து வெளிவர ஏதாவது வழி சொல்லுங்களேன் என்று கேட்ட உங்கள் எண்ணத்தை நாங்கள் பாராட்டுகிறோம். 7 ஆண்டுகள் நீங்கள் மகிழ்ச்சியோடு கூட இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்காதபடி வாழ்ந்திருக்கிறீர்கள். அதற்கு உங்களை சிறப்பாக பாராட்டுகிறேன். ஒரு மாதமாக இந்த அமைதி படலத்திலிருந்து வெளியே வர முடியாத நிலைக்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கலாமே. அந்த வாக்குவாதத்தில் உங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருந்திருக்கும். ஒரு வேளை அன்றைக்கே நீங்கள் சரி செய்து இருந்திருக்கலாம். உட்கார்ந்து அதற்குரிய காரணங்களை அலசி ஆராய்ந்து பார்த்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்குமானால் ஒரு மாதம் நீங்கள் விட்டு விட்டீர்கள். இது இன்றும் பிந்திவிடவில்லை ஆகையால் உங்களுக்கு ஒரு வசனத்தை நான் ஞாபகப்படுத்தி பெற விரும்புகிறேன்.
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். ( மத்தேயு 5:9 )
ஒரு வேளை இது அப்படியே குடும்ப மகிழ்ச்சிக்கு நாம் இதை மேற்கொள்ள முடியுமே. இப்போழுது உங்கள் மனைவி அமைதியாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காயப்பட்டு இருக்கலாம். உங்கள் வார்த்தையோ அல்லது ஒரு வேண்டாத ஒரு பங்கு அவர்களை துக்கப்படுத்தி இருந்திருக்கலாம். நீங்கள் ஏன் என்று கேட்கக்கூடாது. நான் உன்னை எதிலே துக்கப்படுத்தி இருக்கிறேன் என்று கேட்கலாமே. பழைய நிகழ்ச்சிகள் கிளராதபடி அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அவர்கள் துக்கப்பட்டு கொண்டு இருப்பதும் காயப்பட்டு இருப்பதும் நீங்கள் கண்டுவிட்டதினால் நீங்கள் நேரிடையாக கேட்டு உங்களுடைய சண்டை ஆரம்பம்போல் தோன்றினாலும் அது சண்டையின் முடிவாக தேவன் அதை மாற்றிக் கொடுப்பார்.
இன்னொரு வசனமும், அதிக பிரயோஜனமுள்ளது. I பேதுரு 3 அதிகாரம், 7ம் வசனம் இப்படி சொல்கிறது
அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
இந்த வார்த்தைகளில் மூன்று குறிப்புகள் தெளிவாக இருக்கிறது. அஜாக்கிரதையாக இருந்தால் ஜெபங்களுக்கு தடை வரும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. விவேகத்தோடு நடந்தால் நாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வராதபடி தடுத்து இருக்கலாம். இப்போழுது நடந்து விட்டது ஆனால் ஒரு மாதம் என்று நீங்கள் சொல்வதினால் ஒன்றும் கை தாண்டி போகவில்லை.
ஆகையால் நீங்கள் உங்களை மனதளவில் தாழ்த்தி உட்கார்ந்து எதிலே உன்னை துக்கப்படுத்தினேன் என்று கேட்கலாம். கேட்டு அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த பங்கு உங்கள் பங்கு உண்டு என்பதை நீங்கள் அதனை உணர்ந்து sorry சொல்வது சரியான ஒரு எத்தனம் ஆகையால் உட்கார்ந்து நேரம் எடுத்து இதை நீங்கள் சரிப்படுத்தி வரும் நாட்களிலே இன்னும் நீங்கள் விவேகத்தோடும், ஞானத்தோடும் தியானம் பண்ணி உங்கள் காரியங்களை செய்தால் மறுபடியும் இந்த நிகழ்ச்சி நடக்காதபடிக்கு நீங்கள் தடுத்து ஆட்கொள்ள முடியும். 7 ஆண்டுகள் கடந்த பிறகு இப்படிப்பட்ட சலனங்கள் வருகின்றது என்று ஆநேக ஆராய்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றது. ஆகையால்; 7 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்த நீங்கள் இனி இந்த 2 வார்த்தைகளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இதை உடனடியாக நீங்கள் சரி செய்ய வேண்டும்.
உங்களை தாழ்த்துவது பெரிய நஷ்டம் இல்லை. உங்கள் குடும்பத்திற்காக அது ஒரு லாபம். ஆகையால் நேரம் கண்டுபிடித்து தைரியமாக சரி செய்து sorry சொல்லி நீங்கள் காரியங்களை செப்பனிடுங்கள்.
தேவன் சந்தோஷப்படுவார். சமாதானம் பண்ணுகிறதினால் தேவனுடைய உங்கள் வீட்டில் பழையபடி மனநிறைவும், மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும் தேவன் தருவார்.
உங்களுக்கு குழந்தைகள் இருப்பார்கள் என்று எண்ணுகிறோம். உங்கள் குழந்தைகளும் இதில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். ஆகையால் அவர்களுக்கும் நீங்கள் உடனடியாக காரியங்களை சரி செய்து மறுபடியும் இழந்தவைகளை எல்லாம் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களை வாழ்த்துகிறேன்.
உங்களுக்காக ஜெபிக்கிறேன்
அன்புடன் உங்கள் அங்கிள்
இராஜாசிங்