நடு இரவு… அடர்ந்த காட்டின் நடுவில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தான் அந்த மனிதன். தூரத்தில் கையில் விளக்குடன் கட்டைகளை வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்தனர் சில கூலியாட்கள். மேஸ்திரி கவனித்து, கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் இருந்தான். பாரம் அதிகமான கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் இருந்தான். பாரம் அதிகமான கட்டை ஒன்றை அவர்கள் தூக்க சிரமப்பட்டனர். மேஸ்திரி உதவியிருந்தால், அக்கட்டையைத் தூக்கியிருக்க முடியும். ஆனால் மேஸ்திரியோ தன்கௌரவத்தை விட்டுக் கொடுக்க மனமின்றி உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான். வழிப்போக்கன் இதைக் கண்டான்;;; பாரத்தைத் தூக்கத் தன் தோளைக் கொடுத்து உதவினான். மேஸ்திரி, கோபத்துடன் வழிப்போக்கனை நீ யார்? இங்கே உனக்கு என்ன வேலை? என் வினவினான். “நான் தான் இந்நாட்டு ஜனாதிபதி” என்றார் மாறு வேடமணிந்து வந்த அமெரிக்க ஜனாதிபரி ஜார்ஜ் வாஷிங்டன்! நம் இயேசு அனைவரிடமும் எத்தனை தாழ்மையுடன் நடந்து கொண்டார்! கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில் உன் தாழ்மை வெளிப்படுகின்றதா? “எவனாகிலும் முதன்மையானவனாக இருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” மத்தேயு. 20:27
|