இயேசு நம்முடைய துக்கங்களை சுமப்பார். இனி நாம் சுமக்க வேண்டியதில்லை.
Pastor Victor Chelliah

இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்- தலனாகிய பேதுரு விசுவாசிகளுக்கு எழுதும் போது 1-பேதுரு 1:7ல் இப்படியாக எழுதுகிறான்..

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்

 நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டாகும் போது நாம் துவண்டு போய் ஆண்டவரைத்தானே பின்பற்றுகிறோம், ஆண்டவரைத்தானே நாம் சேவிக்கிறோமே, நமக்கேன் இந்த பிரச்சனை என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பகுதி உபத்திரவம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆண்டவர் ஆசீர்வதிர்க்கிறார், மேன்மைப்படுத்துகிறார், பெருகச் செய்கிறார் என்பது உண்மை தான். ஆனால் இந்த உலக பிரகாமன பெருக்கங்களினால் ஆண்டவர் மகிமைப் படுகிறார்.

பாடுகள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வரும்ப்போது நீங்கள் பயப்படாதிருங்கள். அவர் ( கர்த்தர்)  உங்களை விசாரிக்கிறவரக இருக்கின்றார்.சங்கீதக்காரன் சங்கீதம் 55:22ல் சொல்வது போல கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடுங்கள், அவர் உன்னை ஆதரிப்பார்;

உதாரணத்திற்கு ஒரு கதை சொல்வார்கள். வயதான ஐயா ஒருவர் சாலையில் மூட்டையை தன் தலை மீது வைத்து கொண்டு போய் கொண்டிருந்தார். அந்த வழியாக காரில் போய் கொண்டிருந்த தனவான், அந்தப் பெரியவர் கஷ்டப்பட்டு போகிறதை பார்த்து ஐயா எங்கே போகிறீர்கள். அதற்கு அவர்  5 மைல் துரம் தள்ளி இருக்கிற ஊருக்கு செல்கிறேன் என்றார். அப்போது இந்த தனவான் சொன்னாரம் நானும் அதைத் தாண்டி தான் செல்கின்றேன். வாருங்கள். வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றாராம். அந்த பெரியவரும் ஏறிக்கொண்ட்டாராம். கொஞ்ச தூரம் சென்ற பின்பு, அந்த தனவான் திரும்பி பெரியவரை பார்த்த போது, பெரியவர் தலையில் மூட்டையை சுமந்து கொண்டு உட்கார்ந்திருந்தாராம். தனவான் ஏன் ஐயா, இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பெரியவர் நான் தான் வண்டிக்கு பாரம். இந்த மூட்டையுமா வண்டிக்கு பாரம் என்றாராம்.

எவ்வளவு மதி கேடான விஷயம். ஆண்டவரை பற்றிக் கொண்டிருக்கிற நாம்,  ஆண்டவரிடம் கண்ணீர்களை சொல்கிற நாம், ஆண்டவர் மேல் பாரத்தை வைக்காமல் நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். அதற்கு பதிலாக என்னுடைய பாரங்களை உம் மீது வைத்து விட்டேன் ஆண்டவரே என்று, ஆண்டவர் மீது பாரத்தை வைத்து விடுங்கள்.  நமக்காக சுமந்து தீர்த்த இயேசு நம்முடைய துக்கங்களை சுமப்பார்.  இனி நாம் சுமக்க வேண்டியதில்லை.

 


Pastor Victor Chelliah is ministering Christian Assembly Mission Church, Chennai, India, A very good bible teacher who could be reached through email 'revvictor@gmail.com