தலைவர் என்பவர் யார்
Rev.J.N. Manokaran
Reaching out people

தலைவர் என்பவர் யார்?

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் பிச்சையெடுப்பவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.  அவர்களுக்கு தலைவர் கிடையாது.  இந்த குழுவினரின் தனித்தன்மை என்னவென்றால் அவர்கள் எல்லாரும் பார்வை இல்லாதவர்கள்.  அவர்களில் அநேகருக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது; இன்னும் சிலருக்கு விபத்து மற்றும் சுகவீனத்தினாலும் பார்வை போய்விட்டது.  அவர்கள் எவ்வாறு தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் நான் ஆர்வமாக இருந்தேன்.  அவர்களுக்கு அது மிகவும் எளிமையாக இருந்தது.  அவர்களில் ஒருவருக்கு ஒரு கண்ணில் மட்டும் பார்வை இல்லாதவராகவும் மற்றொரு கண்ணில் சிறிதளவு பார்வை உடையவராக இருந்தார்.  இது ஆச்சரியமாக இருந்தது! மற்றவர்களைவிட சிறிதளவு பார்க்க கூடிய இவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 மாய்மால பணிவு மற்றும் தலைமைத்துவம்

இந்த தலைமைத்துவம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தேவனால் கொடுக்கப்பட்ட சிறந்த ஆணையாக, கட்டளையாக உள்ளது.  பேருந்தை ஓட்டுகின்ற ஒரு ஓட்டுனர் மிகவும் பணிவானவர் - ஓட்டுனர் உட்காரும் முதல் இருக்கையில் உட்கார மறுத்துவிட்டார்.  மக்கள் எல்லாரும் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகளை கேட்டார்கள், ‘என்ன நடந்தது, ஏன் நீங்கள்; உட்கார்ந்து ஓட்ட மறுகின்றீர்?” ‘மிகவும் மரியாதைக்குரிய மக்கள் எல்லாம் பின்னிருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது நான் எப்படி முதல் இருக்கையில் அமர முடியும்?” என்று அவர் கூறினார்.  சமுதாயரீதியாக மிகவும் மரியாதைக்குரியவர்கள், பொருளாதாரத்தில் அதிகம் வல்லமையானவர்கள் மற்றும் வயதில் முதிந்தவர்கள் இவர்கள் எல்லாம் பின் இருக்கையில் அமர்ந்திருப்பதால், தான் முதல் இருக்கையில் உட்கார தகுதியற்றவன் என்று அவர் கருதினார்.  உத்தியோக சம்பந்தமாக திறமையானவராக இருந்த போதும், தன்னுடைய சமுதாய மற்றும் பொருளாதார நிலையில் தகுதியற்றவராக உணர்ந்ததால் வாகனத்தை ஓட்டுகின்ற பொறுப்பை ஏற்றுக்கொள்வதை தவீர்கின்றார்.  இது மாய்மால பணிவு என்று அழைக்கப்படும்.  இவ்வாறே தேவனாகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக அறிந்துகொண்டவர்கள் அனைவரும் தாங்கள் வகிக்கின்ற அமைப்புகளில் ஆவிக்குரிய தலைவர்களாக இருக்கின்றார்கள்.  ஒரு வேலை அவர்கள் சமுதாய அல்லது பொருளாதார நிலையில் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஆவிக்குரிய தலைவர் பொறுப்பை ஏற்பதை நிராகரிக்க முடியாது.  தேவன் தங்களை வைத்துள்ள இடங்களில் நடத்துகின்ற பொறுப்பை ஏற்பதே தலைமைத்துவமாகும்.

உலகத்தின் வெளிச்சம் அல்லது உப்புத்தூண்

இந்த உலகில் இருளில் உள்ள மக்களுக்கு வெளிச்சம் கொடுத்து வழி நடத்துகிற கிறிஸ்தவர்களே தலைவர்கள்.  ஆனால் வெளிச்சத்தை புதர் மறைத்திருக்கும் போது அதில் இரண்டு காரியங்கள் அடங்கியுள்ளது.  வெளிச்சம் இல்லை மற்றும் இருள் வியாபித்து இருகின்றது.  இருள் வியாபித்து இருக்கும்போது வெளிச்சமானது ஒரு நபர் காயப்படுவதற்கும், கீழே விழுவதற்கும் தடையாகவும் இடையூறாகவும் மாறிவிடுகின்றது.  இதை போலவே கிறிஸ்தவர் ஒருவர் தான் வசிக்கும் நிலையில் தலைவர் என்ற நிலையில் தவறும்போது அது உப்புத்தூணாக மாறிவிடுகின்றது, மக்களுக்கு இடையூராகவும் அவர்கள் விழுவதற்கு காரணமாகவும் இருக்கின்றார்கள்.

இயக்கத்தின் தலைவர்கள்

‘இயக்கத்தின் தலைவர்” என்று இந்த புத்தகத்தின் தலைப்பை ஆலோசித்து: கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது எப்பொழுதும் இயக்கத்துடன் தான் இருக்க வேண்டும் என்பதற்காக.  இயக்கம் என்பது மக்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய ராஜ்ஜியத்தை உண்மையாக கொண்டுவர வேண்டும் என நிதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. - (தனித்தனியாகவும,; கூட்டுறவாகவும்).  இது மக்களுக்கு இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பை ஏற்படுத்துவதில் உதவுவதில் இருந்து தொடங்குகின்றது.  ஆகவே ‘இயக்கத்தின்” தன்மை, சாராம்சம் மற்றும் வெளிப்படுதல் என்பதே கிறிஸ்தவ தலைமைத்துவம்.

புதிய தலைமுறையின் தலைவர்களுக்கான சவால்.

இந்த உலகத்தின் தோற்றத்தை (தன்மையை) மாற்றுவதற்கு தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் கூட்டமாக இயக்கத்தின் தலைவர்களாக தேவைப்படுகின்றார்கள்.  ’21 நூற்றாண்டின் திருச்சபைக்கு இயக்கத்தை குறித்து சிந்திகின்றவர்களும், அப்போஸ்தல தலைமைத்துவமும் தேவைப்படுகின்றது.  இயக்கத்தின் தலைமைத்துவம் என்று நான் கருதுவது, தலைவர் என்பவர் வேத வசனத்தை புதிய (கண்ணோட்டங்களில்) படித்து, அதை தற்போது உள்ள கலாச்சாரத்தின் அமைப்புக்கு ஏற்ற வகையில் பொருத்தி மனுக்குலத்தை மீட்படைய செய்ய வேண்டும் - தற்போது உள்ள அமைப்பானது பல கலாச்சாரத்தின் பெருக்கமாகவும், உலகலாவிய தன்மையினால் தாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளது.” உலகத்தின் நங்கூரமான, உலகத்துடன் தொடர்புடைய மற்றும் புதிய தலைமுறையினரை அணுகி பேசக் கூடிய பல வகையான தலைவர்களும் தேவைப்படுகின்றார்கள். ‘நமக்கு புதிய தலைவர்கள் தேவையில்லை, ஆனால் பல வகையான வேறுப்பட்ட தலைவர்கள் தேவைப்படுகின்றது.”


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.

Social Share