முழு பலத்தோடே
அன்பு ஒளி
Reaching out people

நான் ஒரு அரசு அலுவலகத்தில் Steno வாக இருக்கிறேன். என்னுடைய அலுவலகத்திற்கு நான் எப்பொழுதும் 10 நிமிடம் முன்பாகவே சென்று விடுவேன். என்னுடைய அலுவலகத்திலுள்ளவர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்வது வழக்கம். “10 நிமிடம் முன்பாக வருகிறீர்களே உங்களுக்கு என்ன O.T.யா தருகிறார்கள்?” என்று கேட்பது வழக்கம். சிலர் இப்படிக் கூடக் கூறுவார்கள். உங்களுக்கு வீட்டில் எந்த வேலையும் இருக்காதா என்று. “ஆமாம் எனக்கும் வேலைகள் உண்டு; ஆனால் நான் சிறு பிள்ளையாயிருக்கும் போது படித்துக் கொண்டப் பாடம். கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பேன் நான் கொஞ்சத்தில் உண்மையாயிருக்கும் போது ஆண்டவர் என்னை கண்டிப்பாக உயர்த்துவார் என்ற சிந்தனை எனக்குள் எப்பொழுதும் இருக்கும்.

காலையில் எழுந்திருந்து எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பின்பு அலுவலகத்திலும் எந்த வேலைக்கும் யாரையும் எதிர்பார்க்காமல் செய்வது வழக்கம். ஒவ்வொரு நாள் காலையும் என்னுடைய துணி, பிள்ளைகள் துணி மற்றும் என்னுடைய கணவனின் துணிகளைத் துவைப்பது வழக்கம். என் சரீரம் பெலவீனமாகக் காணப்பட்டாலும் ஒரு நாளும் இந்த வேலையை நாளை செய்வோம் என்று தள்ளி வைப்பது கிடையாது.

இப்போது எனக்கு வயது 45. ஒரு நாள் துணி துவைக்கும் போது இப்படியாக ஜெபித்தேன். “ஆண்டவரே! முன்போல என்னால் வேலை செய்ய முடியவில்லை. சரீரம் பெலவீனமாக இருக்கிறது. ஆனாலும் நான் பிறரை எதிர்பாரமலும் சரியான நேரத்திலும் என் வேலைகளைச் செய்ய உதவும்” என்று.

ஒரு நாள் Washing Powder Coverக்குள் ஒரு கூப்பன் இருந்தது. இந்தக் கூப்பனை நிரப்பிப் போட்டால் குலுக்கலில் முதல் பரிசு  Washing Machine  என்று இருந்தது. நான் அந்தக் கூப்பனை நிரப்பினேன். நாட்கள் கடந்தது. ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் “உங்களுக்கு ஓர் Washing Machine  அன்பளிப்பாகத் தர உள்ளோம். நீங்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று எழுதியிருந்தார்கள். எனக்கே என்னுடைய கண்களை நம்ப முடியவில்லை. அடுத்த நாள் நான் சென்று அந்த பரிசை வாங்கி வந்தேன். இப்படி இந்த பரிசு எனக்கு கிடைக்கவில்லையென்றால் என்னால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அதனையும் ஆண்டவர் தடுத்தாட் கொண்டார்.  அதற்காக நான் ஆண்டவருக்கு நன்றிச் சொல்லுகிறேன். என்னுடைய வேலை சிறியதாகயிருந்தாலும் நான் கொஞ்சத்தில் உண்மையாகயிருந்ததினால் ஆண்டவர் என்னைக் கனம் பண்ணினார்.

“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ?
அதை உன் முழு பலத்தோடே செய்” (பிரசங்கி 9:10)


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'