ஜூலியஸ் சீசர்
Mr.Arul Manohar
Walking with God Article Image

ஜூலியஸ் சீசர் பிரிட்டனைக் கைப்பற்றுவதற்கு முன், பல முறை தன் வீரர்களில் ஒரு பகுதியை மட்டும் அனுப்பி வந்தான். சிறிய தீவு தானே என்பதால் அவன் தன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆயினும் ஒவ்வொரு முறையும் வீரர்கள் தோல்வியையே தழுவினர். இறுதியில் வெறுப்புடன் சீசர் தன் வீரர்களுடன்  அந்நாட்டில் வந்திறங்கினான். முதலில் தன் வீரர்களை மட்டும் தீவுக்குள் அனுப்பினான். உள்ளே போன வேகத்தில் ஒடி வந்து விட்டனர் வீரர்கள்.

அப்போது, வெற்றியை எப்படியும் பெற்று விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு தைரியமாக ஓர் முடிவினை சீசர் எடுத்தான். தான் வந்த கப்பலையும் வீரர்கள் வந்த படகுகளையும் தீ வைத்துக் கொளுத்தி விடும்படி ஆணையிட்டான். அதை இரகசியமாகச் செய்து முடித்த பின்னர், சீசர் தன் படை வீரர்களை உயரமான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று கீழே உள்ள கடல் பகுதியைக் காட்டினான். படை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சி! ஆம் அவர்கள் வந்த கப்பல் மற்றும் படகுகள் அனைத்தும் கடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. திரும்பிப் போவதற்கான எல்லா வாய்ப்புகளையும் தடுக்க சீசர் அவற்றைக் கொளுத்தி விட்டான்.

விளைவு?. வீரர்களுக்கு இருந்தது ஒரே வழி தான்!. திரும்பிச் செல்வதற்கான வழிகளை யோசிக்காதபடி துணிவுடன் முன்னேறி போரிட்டு இங்கிலாந்தைக் கைப்பற்றி விட்டனர்! வீரர்களின் வெற்றிக்குத் தடையாக இருந்தது அந்தப் படகுகளே! முழுமையான வெற்றியை அடைய விடாமல் அவை தடுத்தன.

பல நாட்களை, கிறிஸ்துவற்ற பாதையில் முழுமையான வெற்றியின்றி கழித்துவிட்ட நமக்கு இனி வருகின்ற காலங்களும் அப்படியே தான் இருக்கப் போகிறதா?.

அல்லது கிறிஸ்துவுடனான உறவை தடுக்கும் காரியங்களையும், சிற்றின்பங்களையும் கொளுத்தி, துணிவுடன் முன்னேறி, கிறிஸ்து உலகில் அவதரித்த நோக்கத்தை நம் வாழ்வில் அனுமதிக்கப் போகிறோமா?

இனி வருகின்ற நாட்களில் தேவ பாதையில் ஆவியானவர் வழி நடத்துதலோடு நடந்து செல்வோமா?


Mr.Arul Manohar with heart to Serve Lord has been in the ministry for over 2 decades. Working at Evangelical Union ( EU ), was the editor for their Tamil Magazine and their National English Magazine. Now he is Serving the Lord as General Secretary of Evangelical Union.