கடன் தொல்லை
தரிசனச் சுடர்
Walking with God Article Image
கடன் தொல்லையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ரஷ்ய படைவீரன் ஒருவன், மிகவும் சோர்வடைந்தவனாய், தன் கடன் எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் எழுதி, அடியி;ல் “யார் இந்தக் கடைனைத் தீர்ப்பார்”?  என்று மனம் உடைந்து குறிப்பிட்டிருந்தான். அப்படியே தூங்கியும் விட்டான். அன்று இரவில் அவன் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிப் பார்க்க வந்த மன்னன் நிக்கோலஸ், படைவீரனையும், அருகில் இருந்த பேப்பரையும் கண்டான். அதை வாசித்த அவன் மனதுருகி, கடைசி வரியின் கீழ் “நிக்கோலஸ்” என்று மட்டும் எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டான்.
 
காலையில் எழுந்து பார்த்த படைவீரனுக்கு பேப்பரில் “நிக்கோலஸ்” என்ற பெயரைப் பார்த்தபோது ஒன்றும் புரியவில்லை. அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே அரசனிடமிருந்து வந்த ஒருவன், பேப்பரில் காணப்பட்ட தொகையை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தான். கடன் தீர்ந்தது!
 
கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் ரகசியம் அது தானே!

Tharisana Sudar is a monthly magazine publised by Evangelical Students of India (UESI), which was founded in 1954. Their vistion is to evangelize post-matric students in India, nurture them as disciples of the Lord Jesus Christ, that they may serve Church and Society.