மனதில் பதித்துக் கொள்ளுதல்
Dr. செல்வின்
Walking with God Article Image

நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் அறிவுத்திறனில் ஞாபகச்சக்தி ஒரு ஆச்சரியமான் ஈவாகும். நமக்கு அவசியமான தகவல்களை /உண்மைகளை நினைவில் வைத்துக் கொள்ளவும், நினைவூட்டிப் பார்க்கவும் நாம் பழகியிருக்கிறோம். நாம் பெற்றிருக்கும் கல்வி பயிற்சியின் வாயிலாக இதற்கான வழிமுறைகளையும் கற்றறிந்திருக்கிறோம்.

மனதில் பதிந்துவிடும்படி ஒரு குறிப்பிட்ட தகவல் அல்லது உண்மையை மனப்பாடமாகப் படித்து கொள்வது "மனனம் செய்தல்" என்று அழைக்கப் படுகின்றது.  இது ஆங்கிலத்தில் Memorise அல்லது Learning by Heart என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள் உள்ளத்தில் பதிந்துவிடும்படி படித்துக் கொள்வதாகும். மனப்பாடமாகப் படித்தும் சில நேரங்களில் மறந்து விடலாம்.  ஆனால் உள்ளத்தில் உணர்வோடு மனதைப் பயன்படுத்திக் கற்றுக்கொண்ட உண்மைகளை  நாம் எளிதில் மறப்பதில்லை.

உதாரணமாக நாம் எப்படியெல்லாம் அவசியமான தகவல்களை மனதில் பதித்து வைத்துக்கொள்ளுகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு ஊருக்கு செல்லும்போது ஒரு குறிப்பிட்ட வீட்டை கண்டுபிடிப்பதற்கு வழியையும், அடையாளங்களையும் தெரிந்து கொள்வோமென்றால் எளிதாக சென்றடையலாம்.

கம்ப்யூட்டரில் பல்லாயிரகணக்கான தகவல்களை பதித்து கொள்ள /சேமித்துக் கொள்ள முடியும். தேவையான நேரங்களில் மீண்டுமாக வெளியே கொண்டு வந்து பயன்படுத்த முடியும். அதே போல நம்முடைய மனதையும் தக்க முறையில் பயன்படுத்தி நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும். சரியான விதத்தில் மனதில் சேமித்து வைத்துக் கொள்ள / பதித்து வைத்துக் கொள்ள பயிற்சியும் பழக்கமும் இருக்கும் என்றால் எல்லாராலும் ஞாபக சக்தியை விரிவாக்கிக் கொள்ள முடியும்.


யோபு 22:22 அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.


Dr.Selwyn founder of Follow-up Ministries Trust, Oddanchatram ( India ), is a Bible Teacher and author of many christian books. Innovative and simplified bible teaching methods taught by him has helped many christians and non-believers alike to know more about God. He could be reached at 91-4553-240623.