தாலந்துகளை அறிந்து கொள்ளுதல்
Rev.J.N. Manokaran
Walking with God Article Image

மனித வள மேம்பாட்டு மேலாளரின் பணிகளில் ஒன்று நபர்களிடம் உள்ள திறமையை கண்டறிதல் ஆகும்.  மக்களினால் இயற்கையாகவே சில காரியங்களை சிறப்பாக செய்ய முடியும், அது அவர்களின் பெலனாக உள்ளது.  மற்ற காரியங்களையும் அவர்களினால் செய்ய முடியும். ஆனால் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்காது. 

ஒரு தலைவரானவர் தன்னுடைய சொந்த தாலந்துகள் மற்றும் திறமைகளை புரிந்துக் கொள்ள வேண்டும்.  "தாலந்து என்பது ஒருவருக்கு இயற்கையிலேயே இருக்கின்ற தாலந்து அல்லது மனப்பான்மை ஆகும்.”    அநேக நேரங்களில் தாலந்துகள் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் என்பது மற்றவர்களினால் கண்டுபிடிக்கப்படும்.  ஒரு நபர் தனக்கு இந்த தாலந்து இருக்கின்றது என்று நினைத்து கொள்வது சரியல்ல., மற்றவர்களினால் அது சரியாக பாராட்டப்பட வேண்டும்.

பொதுவாக உள்ளூர் திருச்சபையும் கிறிஸ்தவ ஐக்கியமும் இதை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது.  என்னுடைய நெருங்கிய நண்பரான மருத்துவர் செல்வின் எபினேசர் - க்கு நான் எழுதிய சில கடிதங்களை படித்ததன் மூலம் அவர் எனக்கு எழுதுகின்ற தாலந்து உள்ளது என்று கண்டுபிடித்தார்.  அவர் என்னை எழுதும்படி உற்சாகப்படுத்தினார், அதன் மூலமாக நான் எழுத்தாளராக முன்னேறினேன்.

1. சொல் / மொழிவள ஆற்றல் (திறமை):

சில மக்கள் படிப்பதில், எழுதுவதில், கதை சொல்லுவதில், தேதி சத்தியங்கள் மற்றும் நபர்களை நினைவு வைப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.  இவர்கள் வார்தையில் யோசிப்பார்கள்/ சிந்திப்பார்கள்.  இவர்கள் தொலைபேசியில் பேசுவதைவிட கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.  பவுலுக்கு இந்த ஆற்றல் காணப்பட்டது, புதிய ஏற்பாட்டில் மூன்றில் ஒரு பங்கு எழுதியுள்ளார்.

2. தொலைநோக்கு சிந்தனை ஆற்றல் (திறமை):

இவர்கள்  கேள்விகள் கேட்பதிலும், புள்ளி விபரங்களை விளக்குவதிலும், அதை உருவாக்குவதிலும், ஆராய்வதிலும், மதிப்பிடுவதிலும், பரிசோதிப்பதிலும் சிறந்தவர்கள்.   லூக்கா மக்களை போட்டி எடுத்து, தேதிகளை குறித்து வைத்து, வரிசை வாரியாக சுவிசேஷத்தை தந்திருகின்றார். மற்றும் அப்போஸ்தவர் நடபடிக்கையும் தந்திருகின்றார்.  அவருக்கு இந்த ஆற்றல் இருந்தது.

(...தொடரும்...)


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.