ஆண்டவரை தேடுவதற்கு அரைமணி நேரம் என்று வைத்துக் கொள்வது சரியா?
நாமெல்லருக்கும் கர்த்தருடன் நேரம் செலவிட வேண்டும் என்று நன்றாக தெரியும். ஆனால் நாம் அப்படி நேரம் எடுத்துக் கொள்வதில்லை. சில சமயங்களில் எழுப்புதலாக உற்சாகத்துடன் இருக்கும் போது, நாம் நேரம் செல்வது தெரியாமல் செலவிடலாம். ஆண்டவருடன் நேரம் செலவிடுவது, ஒரு ஆவிக்குரிய ஒழுங்கும், பழக்கமும் ஆகும். அதை படிப்படியாக உறுதியாக பயிற்சி செய்து வளர்த்து கொள்வது சிறந்தது. அரைமணி நேரம் என்று வரையறுத்து அதை செல்போன் அழைப்புகள், டி.வி. நிகழ்ச்சிகள், காலை செய்தித்தாள் போன்ற இடையூறுகள் குறுக்கே வராமல் முழுமையாக செலவிடுவது நல்லது. திட்டமிட்டு செலவிடும் போது காலப் போக்கில் அது நல்ல பழக்கமாக மாறிவிடும்.
அதிகாலையில் தான் அரைமணி நேரம் எடுக்கவேண்டுமா?
அதிகாலையில் ஆண்டவருடன் நேரம் செலவழிப்பதே ஒரு நாளை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறந்த ஆயத்தமாகும். ஆண்டவரை அதிகமாய் நேசித்தவர்கள் ஆண்டவருக்காக அதிகம் பயன்பட்டவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டுக்காலத்திலும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இருபது நூற்றாண்டுகள் சரித்திரத்திலும் அதிகாலையில் ஆண்டவரை தேடின பக்தர்களாய் இருந்தார்கள்.