அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன் - அன்பு நேசரே
 
ஆராதனை ஆராதனை - 2
அன்பர் இயேசு இராஜனுக்கு
ஆவியான தேவனுக்கு

1.   இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
    உந்தன் நினைவால் நிரப்பவேண்டும் - 2
    என் வாயின் வார்த்தை எல்லாம்
    பிறர் காயம் ஆற்ற வேண்டும் - 2     -ஆராதனை

2.   உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
    என் இதயத் துடிப்பாக மாற்றும் - 2
    என் ஜீவ நாட்கள் எல்லாம்
    ஜெபவீரன் என்று எழுதும் - 2        -ஆராதனை

3.   சுவிசேஷ பாரம் ஒன்றே
    என் சுமையாக மாற வேண்டும் - 2
    என் தேச எல்லையெங்கும்
    உம் நாமம் சொல்லவேண்டும் - 2    -ஆராதனை

4.    உமக்குகந்த தூய பலியாய்
     இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் - 2
     ஆட்கொண்டு என்னை நடத்தும்
     ஆவியாலே என்னை நிரப்பும் - 2      -ஆராதனை


Athikaalaiyil Um Thirumukam Thaeti

Athikaalaiyil Um Thirumukam Thaeti
Arppaniththaen Ennaiyae
Aaraathanai Thuthi Sthoeththirankal
Appanae Umakku Thanthaen - Anpu Naesarae
 
Aaraathanai Aaraathanai - 2
Anpar Iyaesu Iraajanukku
Aaviyaana Thaevanukku

1.   intha Naalin Ovvoru Nimitamum
      Unthan Ninaivaal Nirappavaentum - 2
      En Vaayin Vaarththai Ellaam
      Pirar Kaayam Aarra Vaentum - 2  - Aaraathanai

2.   unthan Aekkam Viruppam Ellaam
      En Ithayath Thutippaaka Maarrum - 2
      En Jeeva Naatkal Ellaam
      Jepaveeran Enru Ezhuthum - 2  -aaraathanai

3.   suvisaesha Paaram Onrae
      En Sumaiyaaka Maara Vaentum - 2
      En Thaesa Ellaiyenkum
      Um Naamam Sollavaentum - 2 -aaraathanai

4.   umakkukantha Thuuya Paliyaay
      Intha Utalai Oppukkotuththaen - 2
     Aatkontu Ennai Nataththum
     Aaviyaalae Ennai Nirappum - 2 -aaraathanai