நான் பாவி தான்

நான் பாவி தான் - ஆனாலும் நீர்

மாசற்ற இரத்தம் சிந்தினீர்;

வா என்று என்னைக் கூப்பிட்டீர், என் மீட்பரே வந்தேன்.

 

நான் பாவி தான் - என் நெஞ்சிலே

கறை பிடித்திருக்குதே

என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே, வந்தேன்.

 

நான் பாவி தான் - பயத்தினால்

அலைந்து பாவ பாரத்தால்

அழிந்து மாண்டு போவதால், என் மீட்பரே வந்தேன்.

 

நான் பாவி தான் - மெய்யாயினும்

சீர் நேர்மை செல்வம் மோட்சமும்,

உம்மாலே பெற்று வாழவும், என் மீட்பரே, வந்தேன்.

 


Naan Pavi than Analum Neer

Naan Pavi than Analum Neer

Masatra Iratham Sindhineer

Vaa Endru Ennai Kooppitteer En Meetparae Vandhaen

 

Naan Paavi than En Nenjilae

Karai Pidithirukkuthae

En Karai Neenga Ippothae En Meetparae Vandhaen

 

Naan Paavi than payathinal

Alaindhu Pava Parathal

Azhindhu Mandu Poavathal En Meetparae Vandhaen

 

Naan Paavi than Meyya yinum

Seer Nermai Selvam Moatchamum

Ummalae Petru Vazhavum En Meetparae Vandhaen