அமேசிங் கிரேஸ் ( Amazing Grace )
His Grace Ministry Team
Song Birth

Amazing Grace, how sweet the sound,
That saved a wretch like me.
I once was lost but now am found,
Was blind, but now I see.

ஆப்பிரிக்க நாடுகளில் கொத்தடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்க கடற்கரையோரங்களில் விற்பனை செய்த ஜான் நியுட்டன் எழுதிய பாடல் தான் இது.

கொத்தடிமை தொழில் என்பது 200 ஆண்டுகளுக்கு முன் பிரசித்து பெற்ற தொழிலாக இருந்த்து.கொத்தடிமை மனிதர்களை வாங்கிய பின் சங்கிலியால் கப்பல் தளத்தில் பிணைக்கப்பட்டு 600க்கும் மேலானவர்களை ஒரு கப்பலில் கொண்டு வருவார்கள். அமெரிக்க கரை வந்த பிறகு, அவர்கள் விற்கபட்டு சாலைகள் அமைப்பதற்கும், வயல் வேலைகள் செய்வதற்கும் பயன்படுத்த படுவார்கள்.  இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் மூலமாக தான் அமெரிக்க மாநிலங்களை இணைக்கும் சாலைகள்  பெரும்ப்பாலனவைகள் கட்டப்பட்டன.

ஜான் நியுட்டன் இந்த மாதிரியான, கப்பலின் கேப்டனாக ஆவதற்கு முன் இராணுவத்திலிருந்து தப்பியோடி, பிறகு கைப்பற்றப் பட்டு பொதுமக்கள் முன் சாட்டையடி வாங்கியவர். இதனால் கொத்தடிமை வியாபாரியின் வேலைக்காரராக ஆக்கப்பட்டு இன்னல்கள் பல அனுபவித்தவர். இந்த நாட்களில், ஜான் நியுட்டன் "இமிடேஷன் ஆப் கிரைஸ்ட்" ( "Imitation of Christ") என்ற நூலை படித்தபோது தான் ஆண்டவர் மாறுதலுக்கான விதையை அவர் மனதில் தூவினார். ஆண்டவரை நெருங்கின அந்த ஆரம்ப நாட்களில், கப்பலின் மாலுமியாக பயணித்த போது பெரும்புயல் காற்று அவரை மரண சூழலுக்கு தள்ளியது. அப்போது "ஆண்டவரே, என் மேல் கிருபையாயிரும்" என்ற வார்த்தைகள் அவரை காப்பாற்றியது மட்டுமில்லாமல், அவரை ஆண்டவருக்குள் முழுமையாக அழைத்து சென்றது.

இது நடந்த தினம், மே, 10 1748.

இதைத் தான் இந்த பாடல் வரிகளில் தம் அனுபவங்களை வெளிப்படுத்தினார்.

"பேராபத்திற்கும், கண்ணிகளுக்கும் நான் கடந்தாலும், என் தேவனின் கிருபை பத்திரமாக என்னை வீடு வரை அழைத்து சென்றது"

Thro’ many dangers, toils and snares,I have already come;
’Tis grace has brought me safe thus far,And grace will lead me home

இந்த தேவ ஊழியர் பாஸ்டராக,போதகராக 43 வருடங்கள் இங்கிலாந்தில் பணி செய்தார். இவருடைய அறிவுரை மற்றும் ஊக்கத்தினால் தான், இவருடைய சபை உறுப்பினர் வில்லியம் வில்பர்பொர்ஸ் (William Wilberforce) கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தை பாரளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி, சட்டமாக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்றவர்.


சிறு ஜெபம். அன்புள்ள ஆண்டவரே, இந்த அருமையான சாட்சிக்காக நன்றி செலுத்திகிறோம். தாயின் கருவிலேயே எங்களை தெர்ந்தெடுக்கிறீர். நாங்கள் எதிர்ப்பார்க்காத நேரத்தில், ஆச்சரியபடுகின்ற விதத்தில் எங்களை உம் அண்டையில் சேர்க்கின்றீர். அதற்காக நன்றி செலுத்துகிறோம். இந்த உலகத்தை அல்ல உம்முடைய ராஜ்யத்தை நாட, எங்கள் தாலந்துகளை உமக்காக பயன்படுத்த, எங்களை முழுமையாக அர்ப்பணிக்கிறோம்.

ஆமென்.