என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஜந்து மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உருப்புடையவர்கள் முதலான வியாதிகாரர்கள் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த மனிதன் அங்கே படுத்துக் கொண்டிருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது இவன் நெடுநாட்கள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, முப்பத்தெட்டு வருடங்கள் படுக்கையில் கிடந்த உறுப்புகள் செயலற்று போயிருந்தன. இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாய் இருந்தான்.இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாய் இருந்தான். ...மேலும்


Let  us Praise the Lord together

உன்னைக் குறித்து பாரமுள்ள ஒருவர்.  

உன் வாழ்கைகையில் சமாதானமில்லை, படிப்பிருந்தும், வேலையிருந்தும், பணம் இருந்தும். வாழ்கையில் சமாதானமில்லை.

பாவப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பரிசுத்தமில்லாமல் கலங்குகிறாய். “என்னால் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லையே., என்னை யார் விடுவிப்பார்கள்?” என ஏங்குகிறாய். சரீர வியாதியினால் வேதனைப்பட்டு அங்கலாய்க்கிறாய். குடும்பப் பிரச்சனை, பல தேவைகள் மத்தியில், என்ன செய்வது? என்று சமாதானமில்லாமல் துக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாய்.

“என்னை நேசிக்க யார் உண்டு? என் பாரத்தை மாற்ற யார் இருக்கிறார்கள்? என்று கலங்கும் உன் மீது அன்புள்ள, அக்கரையுள்ள ஒருவர் உண்டு. ஆம்! அவர்தான் ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்து. ...மேலும்
Salvation
Yesu Kappavar

 
HomeFamily  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact