சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?
Bro. Mohan C. Lazarus
Reaching out people

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஜந்து மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உருப்புடையவர்கள் முதலான வியாதிகாரர்கள் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த மனிதன் அங்கே படுத்துக் கொண்டிருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது இவன் நெடுநாட்கள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, முப்பத்தெட்டு வருடங்கள் படுக்கையில் கிடந்த உறுப்புகள் செயலற்று போயிருந்தன.

இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாய் இருந்தான். இவனை ஆரம்பத்தில் கவனித்துவந்தவர்கள் இவனுக்கு உதவி செய்து சலித்து போனார்கள். இப்போழுது உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. வேளா வேலைக்கு உணவு கொடுத்து கவனிக்க யாருமில்லை. மூன்றாவதாக நம்பிக்கையற்றவனாய் இருந்தான். ஆரம்பத்தில் இந்த வியாதி சுகமாகிவிடும் என்று நம்பிக்ககை இருந்தது. இப்பொழுதோ முப்பததெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. “ இனியார் என்னை சுகப்படுத்தபோகிறார்கள்? நான் சாகும் வரை இந்த படுக்கையில் தான் சாக வேண்டும்” என்ற வாழ்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இந்த மனிதன் இருந்தான்.

இப்படி இந்த மனிதன் நெடுநாளாய் வியாதிப்பட்டு, உதவியற்றவனாய் நம்பிக்கையிழந்தவனாய் படுத்திருக்கும் போது, ஒரு நாள் அவனைத் தேடி வந்த மனிதர் அதிசயமான கேள்வியை கேட்டார். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்பதே அக்கேள்வி. சுகத்திற்கு ஏங்கிக்கொண்டிருக்கும் அந்த மனிதன் இந்த வார்த்தைகளை கேட்டு உடனே, ஆச்சிரியப்பட்டு, “ என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்?” என்று அவரை நோக்கிப் பார்த்தான். மனஉருக்கமுள்ளவராக, கண்களில் அன்பு கனிந்தவராக இயேசு கிறிஸ்து அவனை நோக்கி கொண்டிருந்தார். அவன் தன் உதவியற்ற நிலையை இயேசுவிக்கு எடுத்துச் சொன்னான். இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு”, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான்.(யோவன் 5:9)

இதை வாசிக்கும் என் அருமை சகோதரனே! சகோதரியே! ஒரு வேளை நீயும் இந்த வியாதியஸ்தனைப்போல் நெடு நாட்களாக வியாதிபட்டு படுக்கையில் இருக்கலாம். “எனக்கு உதவி செய்ய யாருமில்லை நான் தனிமையாக கஷ்டப்படுகிறேன்.” என்று கலங்கிக் கொண்டு இருக்கலாம். பயப்படாதே! முப்பெத்தெட்டு வருடங்களாக தனிமையில் கிடந்த மனிதனைத் தேடி வந்த இயேசு கிறிஸ்து இன்று உன்னை தேடி வந்திருகிறார். அவர் உன்னை நேசிக்கிறவர். அன்போடு விசாரிக்கிறவர், காரணம், அவரே உன்னை உண்டாக்கினார்.

“டாக்டர்கள் என்னை கைவிட்டார்கள், மருந்துகளாலும் பிரயோஜனம் இல்லை, நான் வாழப்போவது உறுதியில்லை.” என்று நம்பிக்கையிழந்து கலங்கி கொண்டிருக்கிறாயா? கலங்காதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக சுகமாகாத வியாதிகாரனை “எழுந்து நட” என்ற ஒரே சொல்லால் சுகப்படுத்தின இயேசு கிறிஸ்து உன் வியாதியையும் சுகப்படுத்துவது அதிக நிச்சயம். ஏனென்றால், “இயேசு கிறிஸ்துதாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை (சிலுவையில்) சுமந்தார்.(மத்தேயு 8:17). இயேசு உன் பலவீனங்களையும் நோய்களையும் சுமந்து தீர்த்துவிட்டபடியால் அவர் உன்னை சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.

இந்த இயேசு கிறிஸ்து உன்னை தேடி வந்திருக்கிறார், “செஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று உன்னைப் பார்த்து கேட்கிறார். ஆனால், உன் வியாதிக்காக இயேசுவை நோக்கி நீ பார்க்கும் முன்பாக ஒரு முக்கியமான காரியத்தைச் நீ செய்ய வேண்டும். நீ உன் பாவங்களை மன்னிக்கும்படியாக இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏன்னென்றால், சுகத்தை பெற்றுக் கொண்ட இந்த வியாதியஸ்தனை இயேசு தேவாலயத்தில் கண்டபோது, “ இதோ நீ சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே.” என்றார்.( யோவான் 5:14) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையிலிருந்து, இந்த மனிதனுடைய பாவமே இவனுடைய வியாதிக்கு காரணமாயிருந்தது என்பதை அறிகிறோம்.

அருமையான சககோதரனே! சகோதரியே! உன்னுடைய வியாதிக்கு உன் பாவமே காரணமாய் இருக்கலாம். ஆகவே, உன் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடு. அவர் தன்னிடத்தில் வந்த எந்த பாவியையும் புறம்பே தள்ளுவதில்லை.

இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதை விசுவாசி. “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” (ஏசாயா 53:5)

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)                         

“இயேசு கிறிஸ்துவே என் பாவங்களை மன்னியும்” என்று உன் இருதய கதவை திறந்து கொடு. அப்பொழுது அவர் உன் இதயத்தில் வருவார், உன் பாவங்களை மன்னிப்பார். உன் வியாதிகளை குணமாக்குவார். தெய்வீக சமாதானத்திலும், சந்தோஷத்தினாலும் உன் உள்ளத்தை நிரப்புவார்.

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” ( வெளிப்பாடு 3:20)

உன் இருதய கதவை தட்டிக்கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்து, “சொஸ்தமாக வேண்டுமெனறு விரும்புகிறாயா?” என்று இப்போழுது உன்னை கேட்கிறார். அவருக்கு உன் இருதயக் கதவை திறந்து கொடுத்து, இந்த வியாதியஸ்தனைப் போல நீயும் உன் நிலைமையை இயேசுவிடம் சொல். “ நான் அனுபவிக்கும் இந்த வியாதிக்கு காரனமான என் பாவங்களையும் நீர் எனக்காக சிலுவையில் சுமந்தீரே! ஆகவே என் பாவங்களை மன்னித்து, என் வியாதியிலிருந்து சுகம் தாரும்” என்று கேள். இயேசு கிறிஸ்து நிச்சயமாய் உன்னை சுகமாக்குவார்.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5)

இயேசு கிறிஸ்து அவருடைய தழும்புகளால் தொட்டு உன்னை சுகப்படுத்துவாராக.

இந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் எங்களுக்கு எழுதுங்கள்.

தொடர்பு கொள்ள இங்கே கிளிக் (Click) செய்யவும்


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share