இயேசு உன்னை நேசிக்கிறார்
Bro. Mohan C. Lazarus
Reaching out people

“ என்னை நேசிக்க யார் இருக்கிறார்கள்? இந்த உலகத்தில் உண்மையாய் அன்பு காட்ட யாருமில்லையே!” என்று உன் உள்ளம் அன்புக்காக ஏங்குகிறதல்லவா?

“என் கணவர் என்னை நேசிப்பதில்லை, என் மனைவி என்னை மதிப்பதில்லை, என் பிள்ளைகள் என்னை கவனிப்பதில்லை. பெற்றோரும் எனக்காக கவலைப்படுவதில்லை. எனக்காக இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? என்று உன் உள்ளம் கலங்குகிறதல்லவா?”

  நன்பனே, நீ கலங்காதே!.
  இயேசு உன்னை நேசிக்கிறார்.

ஆம், நீ யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்திருந்தாலும், இயேசு உன்னை நேசிக்கிறார்.
உன்னை அவர் நேசித்தபடியினால் இந்த உலகத்தை படைத்து, காத்து வருகிற அவர் உன்னை போல ஒரு எழை மனிதனாய் இந்த உலகத்தில் அவதரித்தார். உன் தோளின் மேல் தன் கரத்தை வைத்து, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று உனக்கு சொல்வதற்காகவே அவர் இந்த உலகத்தில் எழை கோலமெடுத்தார்.

இதோடு அவர் நிற்கவில்லை;  உனக்காகவே கல்வாரி சிலுவையில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு தன் இரத்தம் முழுவதும் சிந்தினார். உன்னை நேசித்தபடியினால்.. ஆம்! உன் மீதுள்ள அன்பினால் உன்னுடைய பாவங்களுக்காக, தானே சிலுவையில் மரிக்க தன்னை ஒப்புக்கொடுத்தார்.
“இயேசு கிறிஸ்துவானவர்.. நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். ( 1.கொரி. 15:3,4)

மரித்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாள் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார். இன்று இந்த இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். உனக்கு அருகில் இருக்கிறார். “உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லுகிறார். நீ அவரை நேசிக்காவிட்டாலும் அவர் உன்னை நேசிக்கிறார். நீ அவரை நம்பாவிட்டாலும் அவர் உன்னை நேசித்து உன்னை ஆசீர்வதிக்க உன்னை தேடிவருகிறார்.

வேறு மார்க்கத்தில் வைராக்கியமாய் இருந்தபடியினால் “இயேசு தெய்வமல்ல” என்று பரிகாசித்து, கேலி பண்ணிய என்னை, அவர் தேடி வந்தார். என் வியாதி படுக்கையில், டாக்டர்கள் கைவிடப்பட்டு நொண்டியாய் கிடந்தபோது இயேசு என்னை அன்பாய் தொட்டு அற்புதமாய்  சுகமாக்கினார். இயேசுவின் அன்பு என்னை கவர்ந்து கொண்டது.

இந்த இயேசுவின் அன்பு இப்பொழுது உன்னைச் சந்திக்கிறது. உன்னையும் இயேசு நேசிக்கிறார். உன் பாவங்களை மன்னிப்பார். உன் உள்ளத்தில் சமாதானத்தை தருவார்.உன் நோய்களை குணமாக்குவார், உனக்காக அற்புதங்களைச் செய்வார்.

“இயேசுவே! நீர் மெய்யான தேவன் என்று நான் நம்புகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். என் உள்ளத்தில் வந்து என்னை ஆசீர்வதியும், என்று கேள்,

இப்பொழுதே மெய்யான சமாதானம் உன் உள்ளத்தை நிரப்பும்.

உன்னை நேசிக்கும் இந்த இயேசுவைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள நீ விரும்பினால், எங்களுக்கு எழுதுங்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்கை வரலாறு அடங்கிய புஸ்தகத்தை இலவசமாக உங்களுக்கு அனுப்பி வைப்போம்.


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share