யார் என்னை விடுலையாக்குவார்?
Bro. Mohan C. Lazarus
Reaching out people

“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தித்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோமர் 7:24)

இது தான் இன்றைய மனிதனுடைய மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காரியத்திற்கு அடிமைப்பட்டு விடுதலை இல்லாமல் தவிக்கிறான்.

மதுபானம் அருந்தும் பழக்கமுள்ள ஒருவரை சந்தித்தேன். “நீங்கள் ஏன் குடித்து உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, அவர் இவ்வாறு பதில் சொன்னார்.

கொஞ்சமாய் குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று ஆரம்பத்தில் கொஞ்சமாய் குடிக்க பழகினேன். நாட்கள் ஆக.. ஆக குடிப்பழக்கம் அதிகமாயிற்று. இப்பொழுது என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. காலை எழுந்ததும் மது அருந்தாவிட்டால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. இரவில் மது அருந்தாவிட்டால் உறக்கம் வருவதில்லை. என் சம்பாத்தியத்தின் அதிகமான பணம் இந்த மதுவினால் அழிகிறது. இதன் மூலம் என் வாழ்கை கெடுகிறது என்று எனக்கு தெரிகிறது. ஆனால், என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லையே! என்று அங்கலாய்ந்தார்.  

பாவஞ்செய்கிறன் எவனும்  பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34) என்று இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மையுள்ளதாய் இருக்கிறது பாருங்கள்.

வேதம் சொல்லுகிறது, “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கு விடுதலை உண்டு” என்று. இது எத்தனை உண்மையாய் இருக்கிறது! அவரிடத்தில் விடுதலை பெற்றோர் அநேகர். உன்னையும் பாவத்தில் இருந்து விடுவிக்க, பிரச்சனையில் இருந்து விடுவிக்க, பிசாசுகளின் பிடியில் இருந்து விடுவிக்க. கர்த்தரின் அதிகாரமும், இயேசு கிறிஸ்துவின் இரத்தமும், பரிசுத்த ஆவியின் வல்லமையும் போதுமானதாயிருக்கிறது.

ஆகவே, இன்றே உன் விடுதலையை பெற்றுக் கொள்ளலாம். விடுதளையளிக்கும் இயேசுவிடம் வா!.

இயேசுவை ஏற்றுக்கொள்!!

விடுதலையை பெற்றுக்கொள்!!

விசுவாசத்தோடு இந்த ஜெபத்தை ஏறெடு உன் வாழ்கையில் விடுதலையை உணர்வாய்.

விடுதலையளிக்கும் பிதாவே!

என் விடுதலைக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்த இயேசுவே. உம்மை என் உள்ளத்தில் எற்றுக்கொள்கிறேன். விடுதலையின் ஆவியானவருக்கும் என் வாழ்கையில் இடம் கொடுக்கிறேன். விடுவிக்கிற இயேசுவின் நாமத்தில் என் வாழ்கையில் காணப்படும் ஒவ்வொரு பாவக் கட்டுகள் அறுக்கப்படுவதாக! வியாதியின் கட்டுகள் இயேசுவின் நாமத்தில் நீங்கிப் போவதாக! ஒவ்வொரு பிரச்சனைகளும் மாறிப் போவதாக! பிசாசின் அந்தகாரகட்டுகள் இயேசுவின் நாமத்தில் தெறிப்பட்டு போவதாக!

உம்முடைய வல்லமைக்காக, நீர் அளித்த விடுதலைக்காக உமக்காக ஸ்தோத்திரம்! இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் ஆமென்! ஆமென்!!


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share