மகிழ்ச்சி எங்கே?
Bro. Mohan C. Lazarus
Reaching out people

ஏராளமான பணம்,வசதி, புகழ் அந்தஸ்த்து போன்ற காரியங்கள் இல்லாதவர்கள், “இவைகள் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் வாழலாம்” என்று எண்ணுகின்றார்கள் ஆனால் மேற்கூறிய காரியங்கள் அனைத்தும் பெற்ற மனிதர்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களாவென்றால் அதுதான் இல்லை.

“முழு உலகமும் மகிழ்சியையும் பாதுகாப்பையும் வலை போட்டு தேடிக்கொண்டு இருக்கிறது” என்கிறார் ஒர் பிரெஞ்சு மேதை. அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியில் வாழும் கோடிஸ்வரர் ஒருவர் கூறுவதை கேளுங்கள். “நான் மகிழ்ச்சி, நிம்மதியை தேடித் தேடி  ஏமாந்து போனேன்” என்கிறார்.

புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை ஒருத்தி “ பணம், அழகு, கவர்ச்சி, அந்தஸ்து, புகழ், வசதி யாவும் என்னிடம் இருக்கிறது. ஆகையால் இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக, நான் இருக்கவேண்டும். ஆனால் நானோ சற்றேனும் மகிழ்ச்சியில்லாத நடைபிணமாய் உள்ளேன்” என்று புலம்புகிறாள். “மகிழ்ச்சியான வாழ்கை வாழ்வதற்கு தேவையான எல்லா வசதிகளும் எனக்கு உள்ளன, ஆனால் எனக்கோ வாழவே கசக்கிறது”. என்கிறார் இங்கிலாந்து நாட்டு சமூக சேவகர் ஒருவர்.

பிரசித்தி பெற்ற மனோதத்துவ நிபுணர் ஒருவரை ஒர் மனிதன் சந்தித்து, “தனிமையுணர்ச்சி என்னை கொல்கிறது, என் நிலமை பரிதாபமாக உள்ளது, எனக்கு உதவுங்கள்.” என்று கூறினான். அவனை ஆழந்த அனுதாபத்தோடு நோக்கிய மருத்துவர் அவனை நோக்கி, “பிரசித்தி பெற்ற சர்க்கஸ் ஒன்றில் நடிக்கும் கோமாளி ஒருவனின் நடிப்பு மிகவும் சோகத்தில் இருக்கும் மனிதனையும் குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்திடும், நீ போய் அந்த சர்க்கஸ்ஸைப் பார்.” என்ற போது, அந்த மனிதன்; வருத்தத்தோடு நான்தான் அந்த சர்க்கஸ் கோமாளி என்றானாம்.

மேற்கூறிய கூற்றுகளிலிருந்து உண்மையான மகிழ்ச்சி, புகழ், பணம், உயர்பதவி, வசதி போன்ற காரியங்கள் மூலமாய் நமக்கு கிடைப்பதில்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால் உண்மையான மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் என்று நீங்கள் அறிய விரும்புவீர்களானால் கீழே கூறப்பட்டுள்ள காரியங்களை கருத்தாய் தொடர்ந்து வாசியுங்கள்.

உண்மையான மகிழ்ச்சியை நாம் இலவசமாய் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாம் அதை அடைய ஒரு தடைக்கல் உண்டு. அது என்னவென்று நீங்கள் கேட்பீர்களேயானால், அது நீங்களும் நானும் செய்த பாவங்கள் தான். மனிதனாய் பிறந்தவர்கள் நாம் எல்லாருமே அநேக தவறுகளைச் செய்தவர்கள்தான். அநேக தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் தான். தவறு செய்யவேண்டும் என்று மனதார நினைத்து யாரும் தவறு செய்வதில்லை. நமது மானுடத்தன்மை, நம்மை தவறுகளுக்கு நேராய் வழி நடத்திச்செல்லுகிறது. குற்ற உணர்வுகளுக்குள்ளாய் நம்மை கொண்டு செல்லுகிறது. எனவே வேதைனை நிறைந்த மகிழ்ச்சியற்ற வாழ்வுதான் நமக்குக் கிடைக்கிறது.

பாவப்பரிகாரம் அடைய இன்று மனிதன் எத்தனையோ விதங்களில் முயற்சி செய்கிறான். ஆனாலும், மெய்மகிழ்ச்சி அவனுக்கு எட்டாத தூரத்திலேயேயுள்ளது. பாவ வாழ்கையிலிருந்த அவனால் முற்றிலும் விடுதலை அடைய முடியவில்லை. அருமை நண்பரே, ஆனால், நற்செய்தி என்னவெனில் “ இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.” என்பதே. நமது பாங்களுக்கு பரிகாரமாக தமது சொந்த இரத்தத்தையே கல்வாரி சிலுவையில் நமக்காய் சிந்தி மெய் மகிழ்ச்சியை நமக்க தந்தருளிய மெய் தெய்வம் நம்முடைய அன்பின் நாதர் இயேசுகிறிஸ்துவே.

“நம்முடைய பாவங்களை நாம் இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டால் எல்லா அநியாயங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியுள்ளவாராய் இருக்கிறார். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு (மகிழ்ச்சி) அடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

நீங்கள் எத்தகைய பாவியாக இருந்தாலும், உங்கள் பாவங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து விட்டுவிட்டால், அவரை உங்கள் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்வீர்களேயானால், அவரது மாசில்லாத தூய இரத்தம், உங்களைக் கழுவி சுத்திகரித்து மெய் மகிழ்ச்சியை உங்களுக்கு தந்துவிடும். நாம் தொடர்ந்து அவர் பிள்ளைகளாய் வாழும்போது அந்த மெய்மகிழ்ச்சி நம்மில் தொடர்ந்து நிலைநிற்கிறது. அந்த மெய் மகிழ்ச்சி உங்களுக்குத் தேவையான ஒன்றல்லவா! அருமை நன்பர்களே! குடி, சினிமா, போதை பொருட்கள், தவறான அசுத்த பழக்கவழக்கங்கள், அசுத்த சகவாசங்கள் தரமுடியாத உண்மையான மகிழ்ச்சியை இயேசு கிறிஸ்து மாத்திரமே உங்களுக்கு தரமுடியும்.

இன்று நீங்கள் உங்கள் இதயங்களை இயேசு கிறிஸ்துவுக்கு தருவீர்களா? உங்கள் வாழ்க்கையின் பங்காளராய் ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால் உங்கள் தோல்விகள் வெற்றியாய் மாறும். உங்கள் சுகவீனங்கள் நீங்கும். வாழ்க்கைத் தரம் மாறும். மனமகிழ்ச்சி பெற்று சுகவாழ்வு பெறுவீர்கள். எல்லவற்றிற்க்கும் மேலாக நித்திய ஜீவன் கிடைக்கும்.

இந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் எங்களுக்கு எழுதுங்கள்.

தொடர்பு கொள்ள இங்கே கிளிக் (Click) செய்யவும்


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share