நண்பனே! உன்னைக் குறித்து பாரமுள்ள ஒருவர்...
Bro. Mohan C. Lazarus
Reaching out people

உன் வாழ்கைகையில் சமாதானமில்லை, படிப்பிருந்தும், வேலையிருந்தும், பணம் இருந்தும். வாழ்கையில் சமாதானமில்லை.

பாவப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பரிசுத்தமில்லாமல் கலங்குகிறாய். “என்னால் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லையே., என்னை யார் விடுவிப்பார்கள்?” என ஏங்குகிறாய். சரீர வியாதியினால் வேதனைப்பட்டு அங்கலாய்க்கிறாய். குடும்பப் பிரச்சனை, பல தேவைகள் மத்தியில், என்ன செய்வது? என்று சமாதானமில்லாமல் துக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாய்.

“என்னை நேசிக்க யார் உண்டு? என் பாரத்தை மாற்ற யார் இருக்கிறார்கள்? என்று கலங்கும் உன் மீது அன்புள்ள, அக்கரையுள்ள ஒருவர் உண்டு. ஆம்! அவர்தான் ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்து.

இயேசு உன்னை நேசிக்கிறார். பாரத்தோடிருக்கும் உன்னை அழைக்கிறார்.

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்று இயேசு உன்னை அன்போடு அழைக்கிறார். நீ இயேசுவிடம் வரும்போது உன் பாவங்களை மன்னித்து, விடமுடியாத பாவப் பழக்கங்களிலிருந்து உன்னை விடுவித்து, மெய் சமாதானத்தை உனக்கு தருவார். உன் தீராத நோயைக் குணமாக்கி சுகப்படுத்துவார். உன் தேவைகளை சந்தித்து உன் கண்ணீரைத்  துடைப்பார்.

இந்த இயேசு கிறிஸ்து உனக்காக கல்வாரி சிலுவையில் மரித்து, தன் பரிசுத்தமுள்ள இரத்தத்தை உனக்காக சிந்தினார். மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்த இயேசு கிறிஸ்து ஜீவனோடிருக்கிறார்.

நீயும் இயேசு கிறிஸ்துவிடம் வரலாம். உன்னை அவர் ஒருபொதும் புறக்கணிக்க மாட்டார்.

நண்பனே! நீ பரிசுத்தமில்லாமல், சமாதானமில்லாமல், பாடுகள், வியதிகள், கவலைகள் மத்தியில் இருக்கிறபடியினால் இயேசு கிறிஸ்து உன் மீது அதிக பாரமுள்ளவராய் இருக்கிறார்.

உன் பாரத்தை மாற்றி சமாதானம் தர விரும்புகிறார். இன்றே நீ இயேசு கிறிஸ்துவிடம் வா! நம்பிகையோடு வா! அவர் உன் பாரத்தை மாற்றித்தருவார்.

"இயேசுவே என் பாவங்களை மன்னியும், என் உள்ளத்தில் வாரும், சமாதானத்தைத் தாரும்" என்று நீ கேள்.  இயேசு கிறிஸ்து உன் பாவங்களை மன்னித்து மெய் சமாதானத்தை தருவார்.

இந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் எங்களுக்கு எழுதுங்கள்.

தொடர்பு கொள்ள இங்கே கிளிக் (Click) செய்யவும்


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share