நீங்கள் விடுதலையாவீர்கள்
Bro. Mohan C. Lazarus
Reaching out people

ஒவ்வோரு நாளும் அழுகின்ற ஜனங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். யார் என்னை விடுதலை யாக்குவார்கள். யார் என் பாவ வாழ்க்கையை ஜெயிக்க உதவுவார்கள். புனிதமான வாழ்க்கை என்னால் வாழ முடியுமா? என் சொந்த வாழ்க்கை பாவத்தில் அழிந்து கொண்டிருக்கின்றதே?. எனக்கு ஒரு விடுதலை உண்டா?

நண்பரே, நீஙகள் கூட இன்று அழுதிருக்கலாம் இல்லையா?. வெளியே இன்பமாக காணப்பட்ட அந்த பாவ வாழ்க்கை இன்று உங்கள் மனதிற்குள் நரமாக இருந்து உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றீர்கள். உங்களுக்கு வேலை, படிப்பு, பணம் எல்லாம் உண்டு. இருப்பினும் மனதில் நிம்மதி இல்லை. தூக்கமின்றி காணப்படுகின்றீர்கள். உங்கள் பாவம் உங்களை உறுத்திக் கொண்டிருக்கின்றது. உங்கள் பாவத்திற்கு மன்னிப்பு உண்டா என்று புலம்பிக் கொண்டிருக்கின்றீர்கள்.


ஆம் உங்களுக்கு விடுதலை உண்டு. ஏசு கிறிஸ்துவினால் உங்களுக்கு விடுதலை உண்டு. இன்று இயேசு உங்களை விடுவிப்பார். நீங்கள் எப்படிப்பட்ட பாவத்தில் பிணைக்கப் பட்டிருந்தாலும், எவ்வளவு நாட்கள் பிணைக்கப் பட்டிருந்தாலும் இயேசு இன்று உங்களை விடுதலையாக்குவார்.உங்களுக்கு பாவத்திலிருந்து,நோயிலிருந்து,பிரச்சனையிலிருந்தது,பிசாசின் பிடியிலிருந்து விடுதலை உண்டு.இயேசு உங்களை விடுதலையாக்குவார்.இதற்காகத்தான் உன்னதமான தேவன் இந்த உலகத்தில் பிறந்தார்.
 
இயேசு ஒரு மதத்தை தொடங்க இந்த உலகத்திற்கு வரவில்லை.பாவத்தில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஒரு புதிய வாழ்வு,ஒரு விடுதலை கொடுக்கவே இந்த உலகத்திற்கு வந்தார்.பாவமே இல்லாத அவருடைய பரிசுத்த இரத்தத்தை நமக்காக அவர் சிலுவையில் சிந்ததினார்.

"அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" ( கலாத்தியர் 1:4)

"....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான் 1:7)

இயேசு உன்னை விடுதலையாக்க வல்லவராயிருக்கின்றார். பாவத்தை கழுவ ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் உனக்கு அதை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் தான் இயேசு உன்னை விடுதலையாக்க முடியும்.

உன்னை விடுதலையாக்கும் இந்த இயேசுவைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள நீ விரும்பினால், எங்களுக்கு எழுதுங்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்கை வரலாறு அடங்கிய புஸ்தகத்தை இலவசமாக உங்களுக்கு அனுப்பி வைப்போம்.

 

 


Bro. Mohan C. Lazarus is a renowned evangelist, through him, the LORD started His Ministry by name – ‘Jesus Redeems Ministry’, with a core object of telling the world that the LORD Jesus Christ is the only Redeemer.

Social Share