நண்பனே! உன்னைக் குறித்து பாரமுள்ள ஒருவர்
உன் வாழ்கைகையில் சமாதானமில்லை, படிப்பிருந்தும், வேலையிருந்தும், பணம் இருந்தும். வாழ்கையில் சமாதானமில்லை.
பாவப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பரிசுத்தமில்லாமல் கலங்குகிறாய். “என்னால் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லையே., என்னை யார் விடுவிப்பார்கள்?” என ஏங்குகிறாய். சரீர வியாதியினால் வேதனைப்பட்டு அங்கலாய்க்கிறாய். குடும்பப் பிரச்சனை, பல தேவைகள் மத்தியில், என்ன செய்வது? என்று சமாதானமில்லாமல் துக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாய்.
“என்னை நேசிக்க யார் உண்டு? என் பாரத்தை மாற்ற யார் இருக்கிறார்கள்? என்று கலங்கும் உன் மீது அன்புள்ள, அக்கரையுள்ள ஒருவர் உண்டு. ஆம்! அவர்தான் ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்து.
இயேசு உன்னை நேசிக்கிறார். பாரத்தோடிருக்கும் உன்னை அழைக்கிறார்.
“வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28)
»»