For Just Married.. இணைந்தே நடப்போம்…!
Shalom Family Enrichment Ministries
Parent responsibility

* இரு வேறுப்பட்ட குடும்ப பின்னணியத்தில் வளர்ந்த நீங்கள், திருமணம் செய்த பின், “என் பின்னணியத்தைத் தான் என் துணை பின்பற்ற வேண்டும்” என பிடிவாதம் பிடிக்காதபடி, இருவரின் பின்னணியத்தையும் மதித்து, இணைந்து நடவுங்கள்..

* பொது இடங்களுக்குச் செல்லும் போது நாம் உடுத்தும் விதம், நமது கலாசராப்படியா அல்லது மாடர்ன் டிரெஸ்ஸிலா? - இருவரும் இணைந்தே முடிவெடுக்கலாமே. குறிப்பு - எப்படி உடுத்தினாலும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காதப்படி உடுத்துவோம்..

* பணம் அதிகம் தேவைப்படும் இன்றைய சூழ்நிலையில் இருவரும் வேலை செய்ய வேண்டுமா அல்லது ஒருவர் சம்பளம் போதுமா? என்ற சூழலில் இருவரும் அமர்ந்து பேசி எப்படி செய்யலாமென்று இருவரும் சேர்ந்து யோசித்து முடிவெடுக்கலாமே..

* தனி ஜெபம் மிக சிறந்ததே..அத்துடன், குடும்பமாய் ஜெபிப்பது சாலச் சிறந்தது..இருவரும் சேர்ந்து தினமும் ஜெபிப்பது ஆசிர்வாதமே..

* நியாயமற்ற நிகழ்வுகள் உங்கள் வீடுகளில் நடவாதபடி தடுத்திடுங்கள்..துணைவரின் குறைய சுட்டிக் காட்டுவதிலேயே குறியாக இராமல், அடிக்கடி ஒருவரை ஒருவர் பாராட்டி பேசுவது உற்சாகத்தை கொடுக்குமே..

* வீட்டு வேலைகளில் “இதை தான் நான் செய்வேன்” என்றிராதப்படி, எல்லா வேலைகளிலும் கூடிய மட்டும் பகிர்ந்து செய்து சந்தோஷம் காணலாமே..

* முக்கியமான காரியங்களுக்கு இருவரும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்கலாமே..

* நேரத்தை சேர்ந்து திட்டமிட்டு, வேண்டாத காரியங்களைத் தவிர்த்து, நேரத்தை சிறப்பாக முடிந்தவரையில் பயனுள்ள வகையில் செலவிடலாமே..

* பணத்தை செலவு பண்ணுவதிலும், இருவரும் சேர்ந்தே திட்டமிட்டால், மீதம் எடுக்கும் வகையில் வாழலாமே..

* (உம்) அத்தியாவசியமில்லாத காரியங்களில் பணத்தை செலவு செய்யமாலும், ஒருவருக்கொருவர் பண விஷயத்தில் உண்மையாய், இருப்பதிலும் இணைந்து வெற்றி பெறலாமே..

* ஒருவருக்கொருவர் பிடிக்காத காரியங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டால், வாழ்க்கை அதிக சுவையுள்ளதாக மாறுமே.


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.