அன்பான இளம் தம்பதியரே!
Shalom Family Enrichment Ministries

 திருமணம் பந்தம்  என்பது இறுதிவரை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று “எனக்கு எல்லாம் தெரியும்..நான் ரொம்ப Social type.. நான் modern ..” என்று   சொல்லி , வாழ்க்கையைத் தொலைந்தவர்கள் அநேகர்..எதுவுமே எல்லை தாண்டும் போது பிரச்சனைத்தான்..நீங்கள் அதி ஜாக்கிரதையாக இருக்க சில நினைவூட்டுதல்கள்..

1.  அந்தரங்கம் என்பது, உங்கள் இருவருக்கும் மட்டுமே   உரியது..யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ள கூடாது..

2.  துணைவரைப் பற்றி, மற்றவர்களிடத்தில் பேசும் போது, மட்டம்   தட்டிப் பேசாமல், பாராட்டிப் பேசலாம்..

3.  ‘நாகரீகம்’ என்ற பெயரில், எதிர்பாலரிடம் கை கோர்த்தோ, முதுகில் தட்டியோ, கட்டி பிடித்தோ பேச வேண்டவே வேண்டாம்..

4.  உடன் வேலை பார்க்கும் ஆண் , பெண் நண்பர்கள், உடை, Personality, style, complexion  பேசும் திறன் ஆகியவற்றை தேவையில்லாமல் புகழ்ந்து ஆபத்தில் சிக்க வேண்டாம்..

5.  சலுகை பெற வேண்டும் என்பதற்காக, எவரிடமும் தனிமையில் நட்பு பாராட்டவோ, அவரிடம் கொஞ்சி பேசுவதோ கூடவே கூடாது..

6.  வாலிப பெண் பிள்ளைகள், வீட்டு வேலைக்கு வைக்கும் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாக இருப்பது நலம்…தங்க வைக்கவே கூடாது..

7.  எதிர்பாலருடன் Two wheeler-ல் ஒன்றாக பயணிக்கவே வேண்டாம்..அது உங்கள் குடும்பத்தை விரைவில் சிதைத்து விடும்..

8.  உங்களுடைய எல்லா விதமான உணர்வுகளையும் உங்கள் கணவரிடமும் , மனைவியிடம் மட்டும் அனுபவியுங்கள்..

9.  தாம்பத்திய உறவில் ஏற்படும் தடுமாற்றங்களை யாரிடமும் பகிர்த்துக் கொள்ள வேண்டாம்..தேவைப்பட்டால் நல்ல மருத்துவரை அணுகுங்கள்..

10.  துணைவர் விரும்பாத உறவுகளும், பழக்க வழக்கங்களும் வேண்டாமே..

11.  வேலையில் உள்ள பிரச்சனைகளை குடும்பத்திலும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை வேலையிலும் ஒருபோதும் காட்டாதிருங்கள்.


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.