பிரோனோகிராபி ( பாகம்:3)
அருள்திரு சி. இராஜசேகரன்
We have to run away from Sins

வலைத்தளங்களில் அதிக அளவில் பார்க்கப்படுகிற வலைத்தளம் பிரோனோகிராபி வலைத்தங்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. பிரோனோகிராபி என்பது காமக் காட்சிகள் நிறைந்தது.  இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்ப்பது கடினம் மற்றும் செலவு என்ற காலம் மலையேறிப் போய் கைகளில் உள்ள கைப்பேசியின் வாயிலாக காமக் காட்சிகளையும் கதைகளையும் எந்த எல்லைவரையும் பார்க்கக்கூடிய வசதிகள் நம் தொழில் நுட்பத்தால் கிடைக்கப்பெற்றிருக்கிறது. தொழில்நுட்பங்கள் நம் வாழ்வின் உயர்ந்த இலட்சியத்திற்காகத்தான், இழிவான செயலுக்கல்ல

காமக் காட்சியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுகிறது
.பெரியவர்கள் வாழ்ந்து காட்டுவதையே பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் வலிமை என்ன? அதன் வலி என்ன? என்று அறியாமலே கற்றுக்கொள்கிறார்கள்.
.சில பெரியவர்கள் தங்களுடைய காம இச்சைக்கு சிறியவர்களையும் சேர்த்துக்கொள்வதால் அவர்களும் அவர்கள் மூலம் அநேகர் காமக் காட்சியைப் பார்ப்பதற்கு தள்ளப்படுகிறார்கள்.

காமக் காட்சியால் ஏற்படும் சமுதாயப் பிரச்சனைகள்
.தன்னுடைய காமப் பசிக்காக வெறியுடன் அலைவதும், கிடைக்காதப் பட்சத்தில் வேட்டையாடுவதால் இன்று அநேக அப்பாவி சிறுவர்கள் (ஆண் மற்றும் பெண் குழந்தைகள்) பாலுறவு வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். கற்பழிப்பு, குழுவாக பாலுறவு, வழக்கத்திற்கு முறன்பாடான வழியில் பாலுறவு என்று பல்வேறு கொடுமையை உருவாக்குகிறார்கள்.
.காமம் என்பது ஒரு வித தொற்று நோய், இதைப் பற்றித் தெரியாதவர்கள் கூட இந்நோயால் தாக்கப்பட்டுவிடுவார்கள். சமுதாயத்தில் காமக் காட்சியைப் பற்றித் தெரியாதவர்கள் அநேகர் புதிதாகத் தெரிந்து பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள
.காமக் காட்சிகளை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகமாவதால், அதன் தேவை அதிகரிக்கிறது, அதனால் அதன் உற்பத்தி அதிகரிக்கிறது. உற்பத்தியாளர்கள் அதிகரிக்கிறார்கள். பார்ப்போரே உற்பத்தியாளர்களாக மாறும் கொடுமை இன்று இருக்கிறது. காமக் காட்சியை கண்டவர்கள் அதைப் போன்று தானும் காட்சியை உருவாக்கி அதனைக் கொண்டு இன்று பழி வாங்குவதும், பணத்திற்காக மிரட்டுவதும், இக்காட்சிக்கு அடிமையாயிருப்போருக்கு அதிகப் பணத்திற்கு விற்பதும் இன்றைய சமுதாயத்தில் அதிகப் பொருளாதாரம் ஈட்டும் குறுக்கு வழி மற்றும் எளிய வழி.

காமக் காட்சியிலிருந்து விடுதலை பெறும் வழிகள்

*  காமக் காட்சியில் சிக்கித்தவிப்போர் இதனை தவறு என்று முதலாவது புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

*  ஏற்றுக்கொண்ட தவற்றை கடவுளிடம் மற்றும் நெருங்கிய மற்றும் உண்மையுள்ள உங்கள் வாழ்வின் மேம்பாட்டிற்காக துணை நிற்கும் நல்ல தோழர்களிடம் இரகசியமாக அறிக்கை செய்யவும்.

*  காமக் காட்சியை காணாமல் இருக்கமுடியவில்லை என்னும் அளவு அதன் ஆற்றலும், ஆளுகையும் இருந்தால் அதை மேற்கொள்ளும் சக்தியாகிய கடவுளிடம் பெற அவரையே நாட வேண்டும். (ஒவ்வொரு முறையும் காமக் காட்சியைக் கண்டவுடன் அல்ல, காண்பதற்கு முன்பே இதை செய்தால் தப்பிக்கலாம்)

*  நல்ல நண்பர்களின் துணையை எப்போதும் சார்ந்திருத்தல், தனிமையை தவிர்த்தல் போன்ற வழிகளில் மாறிவிடலாம்.

*  வாழ்விற்கான உயர்ந்த இலட்சியத்தை முன்னிறுத்தி அதனை செயல்படுத்தும் வகையில் கடினமாக உழைத்தல்

*  பொது சேவையில் ஈடுபடுத்திக்கொள்வது (தான் பெற்ற விடுதலை வழியையும், அதன் இன்பத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது)

*  இதற்கும் மேல் காமக் காட்சிக்கு அடிமையாயிருப்போர் நல்ல மனநல மருத்துவரின் உதவியை நாடுவது சாலச்சிறந்தது.

காட்சியின் அடிப்படையிலேயே நமது நாட்டின் தத்துவங்கள் அமைந்திருக்கிறது. முடியாதது என்று எதுவுமே இல்லை. ‘மனிதனால் முடியாதது கடவுளால் முடியும்’ என்று இயேசுநாதர் கூறியிருக்கிறார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். கடவுளை நம்புவோரே இதில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்களே என்று சோர்வுறாமல் கடவுளின் அருளையும், மன்னிப்பையும், அவர் அருளும் புதிய வாழ்வின் மேல் நம்பிக்கை வைத்து அவரிடம் நம்மை ஒப்படைப்போம். அவர் நம்மை அவருடைய கண்மணிப் போல் ஒரு தீமையும் நம்மை அனுகாமல் காத்துக்கொள்வார். இறையருளும் இறையாசியும் என்றும் நம்மோடிருப்பதாக!!!

 


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.