பிரோனோகிராபி ( பாகம்:2)
அருள்திரு சி. இராஜசேகரன்
Bible

வலைத்தளங்களில் அதிக அளவில் பார்க்கப்படுகிற வலைத்தளம் பிரோனோகிராபி வலைத்தங்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. பிரோனோகிராபி என்பது காமக் காட்சிகள் நிறைந்தது.  இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்ப்பது கடினம் மற்றும் செலவு என்ற காலம் மலையேறிப் போய் கைகளில் உள்ள கைப்பேசியின் வாயிலாக காமக் காட்சிகளையும் கதைகளையும் எந்த எல்லைவரையும் பார்க்கக்கூடிய வசதிகள் நம் தொழில் நுட்பத்தால் கிடைக்கப்பெற்றிருக்கிறது. தொழில்நுட்பங்கள் நம் வாழ்வின் உயர்ந்த இலட்சியத்திற்காகத்தான், இழிவான செயலுக்கல்ல

காமக்காட்சிகளினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்.

* காமக் காட்சி காண்பதால் கணவன் மனைவியிடையே பாலுறவில் ஒற்றுமை இல்லை, ஒழுங்கு இல்லை, கட்டாயப் படுத்துவதும்,  தன் இன்பத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பாலுறவுமே அங்கு இருக்கிறது.
* காமக் காட்சிகளால் கணவன் மனைவியினிடையே பாலுறவில் திருப்தியற்ற நிலையும், காட்சிகளில் காண்கிறது போலவே முறைகேடான பாலுறவிற்கு கட்டாயப் படுத்துவதும் அதனால் அவர்களிடையே விவாகரத்தும் ஏற்படுகிறது.
* காமக் காட்சிகளால் கணவன் மனைவியினிடையே உள்ள உறவில் உண்மையற்ற நிலை ஏற்பட்டு, கள்ளக்காதல் உருவாகிறது. கள்ளக் காதலில் சிக்கிக் கொண்டவர்கள் அது மற்றவர்களுக்குத் தெரிய வரும் போது அவர்களை திட்டமிட்டும் அல்லது தற்செயலாகவும் கொலை செய்யும் அளவு கொடூர செயலுக்கு நேராக வழி நடத்துகிறது.
* ஒருவொருக்கொருவர் திறந்த மனதுடன் பேசிக்கொள்ளவோ அல்லது நடந்து கொள்ளவோ முடியாத  நிலை உருவாகிறது. ஆகவே சண்டை, அமைதியின்மை ஏற்பட்டு குடும்பத்தில் நல்லுறவை பாதிக்கிறது. ஒட்டி வாழாத தன்மை வளர்கிறது.
* காமக் காட்சிக்காக பணம் செலவழிக்கப்படுவதால் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
* தகப்பன் அல்லது தாய் இப்படிப்பட்ட பழக்கத்தில் இருப்பது பிள்ளைகளுக்குத் தெரியும் போது அவர்கள் இப்பழக்கத்தை பெறுவதால் இத்தீய பழக்கம் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது.

காமக் காட்சிகளைக் காண்பதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது. முதலாவது அது நம்முடைய தனிப்பட்ட வாழ்வின் மதிப்பீடுகளையும், கௌரவத்தையும், இலட்சியத்தையும், குணங்களையும் மற்றும் பழக்கவழக்கங்களையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது. அது தொடர்ந்து குடும்ப வாழ்வையும், அதனைத் தொடர்ந்து எதிர்கால தலைமுறையையும், இறுதியாக ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. இதிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும்.

(தொடரும்)

 


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.