* என் வாழ்க்கை துணைவிக்காக என் 22 வயதில் இருந்தே ஜெபிக்க ஆரம்பித்தேன்
* கல்லூரி நாட்களிலும், பெண்களோடு பழகும் விஷயத்தில் என்னை கறைப்படுத்திக் கொள்ளாத வண்னம் தேவன் என்னை பாதுகாத்தார்
* என் பெற்றோர் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் பெண்ணே எனக்கு மனைவியாக வரவேண்டும் எனத் தீர்மானித்து பொறுமையோடு காத்திருந்தேன்
* என் எதிர்கால மனைவிக்காக என்னுடைய ஜெபம்:"தேவனே! என்னுடைய தன்மைகள் () மற்றும் எதிர்பார்ப்பு என்னவென்று எனக்குத் தெரியாது! என்னிடம் அவளுடைய எதிர்பார்ப்பும், அவளிடம் என் மனதின் எதிர்பார்ப்பும் என்னவென்றும் நீர் ஒருவரே அறிவீர். என்னுடைய தேவைகளுக்கு, எதிர்ப்பார்ப்புகளுக்கும் ஏற்ற ஒரு மனைவியை நீரே எனக்குத் தாரும். இருவரும் மனமுவந்து செல்ல உதவி புரியும். ஆமென்..!"
* தேவன் என் ஜெபத்திற்கேற்றார் போல், ஓர் நல்ல மனைவியை கொடுத்தார். இந்த 10 வருடங்களில், என் திருமண வாழ்க்கையைக் குறித்து நான் மனம் வருந்தியதே இல்லை.
* மணமகளைத் தேர்ந்தெடுப்பதில், நான் வெளிப்புற அழகுக்கோ, நிறத்திற்கோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
* பணத்துக்காக சொத்துகாக பணக்காரப் பெண்ணை மணக்க ஆசைப்படவில்லை.
* எனக்கு நல்ல தோழியாய், எனது வேலையைப் புரிந்து கொள்பவளாய் இருக்க வேண்டுமென விரும்பினேன்.. தேவன் அவ்வாறே நிறைவேற்றினார்.
* ஒவ்வொரு வீடாக பெண் பார்க்க சென்று, பெண்களின் மனதைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, பெற்றோர் தெரிந்தெடுத்து, நன்கு விசாரித்த பின் அனைத்தும் ஒத்துபோன நிலையிலே என் மனைவியை ஓர் ஆலயத்தில் ஆராதனைக்குப் பின் பார்த்தோம்.
* திருமணமான எங்களுக்கு 10 ஆண்டுகள் நிறைவுற்றது. இதுவரை நாங்கள் சண்டை போட்டதேயில்லை.
* என் மனைவியின் கருத்துக்களை மதிக்கிறேன்.. அவள் எனது சொல்லுக்கு மதிப்பு தருகிறாள்.
* இன்று எங்களுக்கு 2 கண்மணிச் செல்வங்கள்..
* ஊழியப் பங்குகளையும் நாங்கள் அனுபவிக்கிறோம்.
* "நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24:15)
By அண்ணன் கிளிஃப்டன்