ஒழுக்கமில்லாத உயர்வு
சகோ. சாம்சன் பால்
We have to run away from Sins

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக் கொள் நீதி -4.13

வசந்த் ஒழுக்க நிலைகளுக்கு மதிப்பளிக்காதவன். ஆயினும் பள்ளிக் கூடத்திலும் கல்லூரியிலும் தேர்வுகளில் முதலிடம் பெற அவனால் முடிந்தது. எனவே நான் எப்படி வாழ்ந்தால் என்ன, சாதனை படைக்கின்றேனே என்று பெருமைபட்டுக் கொள்வான். தன்னுடைய ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை தன்னுடைய ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை தன்னுடைய முன்னேற்றங்களுக்குத் தடையாயிராததால் அவன் யாருடைய புத்திமதிகளையும் கேட்கவில்லை. ஒரு நாள் உயர்ந்த வேலை வாய்ப்பைப் பெற்றான் வசதிமிக்க இடத்தில் திருமணம் செய்தான். ஆனால் திருமணம் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. அவனுடைய நடத்தையில் உள்ள குறைபாடுகளுக்காகத் தான் வகித்த உயர் பதவியையும் இழந்தான்.

ஆம். ஒழுக்கம் இல்லாதவனும் உயர்வுகளை அடையலாம். ஆனால் அந்த உயர்வுகளை அவன சரியாக அனுபவிக்கமாட்டான். அவன் உயர உயரப் பறந்தாலும் ஒரு நாள் கேவலமடைந்து கீழே வீழ்வான். கல்வித் திறனையும். சுhமத்தியத்தையும் கொண்டு பலர் உயர்ந்த நிலைகளை அடைவது உண்மைதான். ஆயினும் ஒழுக்க மற்ற ஒரு வாழ்க்கைமுறை அந்த உயர்வுகளைக் கறைபடுத்துவதோடு, அதனடைய பலன்களை அனுபவிக்கவிடாமலம் செய்தவிடகிறது.

சாலோமோன் ராஜா அறிவாளிதான். ஞானவான்தான். விரும்பிய இலக்குகளை எட்டியவன்தான். ஆயினும் அவன் ஒழுக்கமற்ற ஒரு மனப்பாங்கை விட்டு விடாததால் தான் விரும்பிய யாவற்றையும் அடைந்த போதிலும் வாழ்க்கையில் நிறைவடையவில்லை. கட்டுப்பாடற்ற அவனுடைய மனநிலையினால் தன்னுடைய உயர் நிலையைக் களங்கப்படுத்தினான். எனவே ஒரு நாள் எல்லாம் மாயை, எல்லாம் மாயைஎன்று விரக்தியுடன் கூற நேரிட்டது. ஒழுக்கமாக வாழ்க்கைக்கு முதலிடம் தர மறுக்காதிருங்கள்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.