பிள்ளைகள், சகோதர சகோதரிகளின் கடமைகள்
அருள்திரு சி. இராஜசேகரன்
Parent responsibility

பிள்ளைகளின் கடமை

உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு உன் பெற்றோரை மதி கீழ்படி. அவர்களின் புத்தியைத் தள்ளாதே போன்ற வேதாகமப் போதனைகளை பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தன்னை உலகத்திற்கு தந்த பெற்றோர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு புகழ் சேர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற அவர்கள் தவம் செய்திருக்க வேண்டும் என்று மக்கள் பாராட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு கிரீடமாக இருக்க வேண்டும்.
ஆலம் விழுதுகள் போல பிள்ளைகள் பெற்றோரை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டும். தங்கள் பிள்ளைகளை வளர்ப்பது போல தன் பெற்றோரை அனுசரித்து உதவி செய்ய வேண்டும். பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலநிலை கிறிஸ்தவர்களிடையே இருப்பது கிறிஸ்தவத்தின் வீழ்ச்சியை குறிக்கிறது. உறவுகளைவிட உடமைகள் முக்கியமல்ல. பெற்றோர்கள் வயதான பின்பு அவர்கள் பிள்ளைகளுக்கு அவர்கள்தான் கடைசி பிள்ளைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சகோதர சகோதரிகளின் கடமை

சகோதரர்கள் சகோதரிகள் ஒருமித்து வாழ்வது மிகவும் நன்மையும் இன்பமுமானது. ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. இன்றைக்கு நீதிமன்றங்களில் சகோதர சகோதரிகளுக்குள் இடையே நடைபெறும் வழக்குகள் அதிகம். சகோதர சகோதரிகள் ஒற்றுமையாக வாழ விட்டு கொடுப்பது. போதும் என்கிற மனதும் சகோதர அன்பு பாசம் பற்றும் இருக்க வேண்டும். குடும்ப கௌரவத்தையும் புகழையும் உயர்த்த வேண்டியது குடும்பத்தில் உள்ள அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் உரிய பொறுப்பாகும். சில பெரிய குடும்பங்களில் உள்ள சகோதர சகோதரிகளின் குடும்பத்தார் வருடம் ஒருமுறை எல்லோரும் கூடி கடவுளைத் தொழுது தங்களுக்குள்ள அன்பை பகிர்ந்து கொண்டு அந்நியோந்யத்தை வளர்க்கின்றார்கள். இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளின் அன்பில் குடும்பம் தழைத்திருக்குமானால் குடும்பப் பிரிவினை இருக்காது. குடும்பத்தில் குழப்பங்கள் தவிர்க்கபட்டு அன்பு பாசம் என்னும் கயிற்றால் கட்டப்பட்டவர்களாய் குடும்பத்தினர் இருப்பர். இதன் விளைவு நல்ல சமுதாயம் தேசத்தில் உருவாகும்.


குடும்பம் ஒரு கதம்பம் அதில் பலவித நிறங்களில் மணங்களில் குணங்களில் பூக்கள் நிறைந்து தனித்தனியாக நின்று கொடுக்கும் அழகு நிறம் மணத்தை வட மேலானதாக இருக்கிறது. தனி மனிதனாக இச்சமுதாயத்தில் இருந்து ஒளிவீசுவதை விட குடும்பமாக இருந்து ஒளிவீசும் போது ஒரு சமுதாயத்திற்கே வெளிச்சமாக இருக்கும்

 


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.