என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.(யோவான் - 14:12)
இக்கால வாலிபர்கள் பலர் யாராவது ஒரு சினிமாக நடிகனுக்கோ விளையாட்டு வீரனுக்கோ அரசியல் தலைவருக்கோ விசிறியாக இருப்பதைப் பெருமையாகக் எண்ணுகின்றனர். தான் விரும்பிய நடிகனின் நடிப்பைப் பார்த்து விசில் அடிப்பதும் தன்னுடைய அபிமான விளையாட்டுக்காரன் ஜெயிக்கும்போது தான் ஏதோ ஜெபித்துவிட்டது போல கூச்சலிடுவதும் அரசியல் தலைவனின் போலியான பரவச வார்த்தையைக் கேட்டு கோஷம் போடுவதும் இக்கால வாலிபர்களிடையே தோன்றுகிறவர்களுக்காக விசில் அடித்துக் கொண்டு பார்வையாளர்கள் காலரிகளிலேயே என்றும் வாழ்ககையை ஓட்டுகின்றார்கள்.
நாம் ரசிகர்களாக அல்ல. செயல்படுகிறவர்களாக மாற வேண்டும். பாராட்டுவது நல்ல பழக்கம். ஆனால் நாம் பாராட்டப்பட என்ன செய்கின்றோம் என்பது முக்கியம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னை விசுவாகிக்கின்றவன் நான் செய்கிறவைகளிலும் அதிகமானவைகளைச் செய்வான் என்கிறார். அவர் ரசிகர்களை அல்ல. தம்மைப் போல செயல்படுகிறவர்களை அழைத்தார். அவர் நம்மைப் பாராட்டுகின்றவர்களை அழைக்கவில்லை. தம்மைப் போல மற்றவர்களுக்கு நலமாகவும் மாதிரியாகவும் செயல்படும் மக்களையே அழைத்தார்.
வாலிப வாழ்க்கை விசிறிகளாக வாழ்வதற்காக அல்ல. செயல்படுகின்றவர்களாக வாழ்வதற்காகவே. விசிலடித்து கூச்சலிட்டு கோஷமிட்டு வாழ்வது சற்று நேர மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் அதனால் நமக்கு எந்த அர்த்தப்பூர்வமான பலனும் இல்லை. ஒரு தாவீதைப் போல யோசேப்பைப் போல கர்த்தரோடு நல்ல உறவு வைத்து கர்த்தருக்காக வாழ்ந்தால் அதனால் அநேகர் வாழ்வடைவார்கள் என்பது நிச்சயம்.