புதிதாக திருமணம் ஆன இளம் தம்பதிகளே!
மணம் வீசும் மலர் போல உங்கள் வாழ்க்கை என்றும் சிறப்பாய் அமைய சில குறிப்புகள்…. உங்களுக்கென்றே!
1. மணமேடையில் இருந்து இறங்கி, உங்கள் அறைக்கு சென்றவுடன்தானே, கணவன் மனைவி இருவரும் இணைந்து கை கோர்த்து சில வசனங்களையாவது வாசித்து ஜெபம் பண்ண மறவாதிருங்கள்.. உங்களின் முதலிரவில் ‘Godly Start is a Great Start.’
2. ஒருவருடைய விருப்பு வெறுப்புகளை, அடுத்தவர் அறியவும், புரியவும் முதல் நாளிலிருந்தே முயற்சிக்க வேண்டும்..
3. 100% ஒருவரையொருவர் நம்ப வேண்டும்.. மரியாதையுடனும், கண்ணியமாகவும் அடுத்தவரை நடத்தத தீர்மானித்து வாழுங்கள்..
4. எக்காரணத்தைக் கொண்டும், ‘அடிக்கக் கூடாது’ என்று திட்டமாய்த் தீர்மானத்து திருமண வாழ்வு ஆரம்பிக்கப்பட வேண்டும்..
5. மனைவி/ கணவன், ஒருவரின் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
6. மிகச் சிறந்த நண்பனாக / நண்பியாக- ஆக்கிக் கொள்ளுங்கள்..
7. எங்குச் சென்றாலும், சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும்.. கால தாமதம் ஏற்படின், முன் கூட்டியே செல்போனில் சொல்லுங்கள்..
8. தன் உறவினர்களிடம் அறிமுகம் செய்யும் போது, துணைவரிடம் காணப்படும் ஒரு நல்ல குணாதிசயத்தைக் கண்டிப்பாய்ச் சொல்லி அறிமுகம் செய்ய பழகுங்கள்..
9. இருவரது உறவினர்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை மறக்கக் கூடாது..
10. தாம்பத்தியத்தில் ஒருவர் தேவையை அடுத்தவர் மிகவும் விருப்பத்துடன் எப்போதும் நிறைவேற்றுங்கள். இது ஒரு தலையணை மந்திரம்.
11. இருவரது வங்கிக் கணக்கின் விபரங்கள் , கிரெடிட் கார்டு "பின் நம்பர்கள்" ஆகியவற்றை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளலாமே?
12. முத்தங்களுக்கும் தொடுதல்களுக்கும் குறைவு இருக்கவே கூடாது.
(குறிப்புகள் தொடரும்)