திருமணத்திற்கு ஆயத்தமாகும்
Shalom Family Enrichment Ministries
Be Strong

திருமணத்திற்கு ஆயத்தமாகும் வாலிபர்களுக்கு சில வார்த்தைகள்..

1. செல்போனில் உள்ள, தேவையற்ற ஆண்/பெண் நண்பர்களின் எண்களை திருமணத்திற்கு முன்பே அகற்றி விடவும்.

2. E- mail  ல் வந்த தேவையற்ற நண்பர்களின் communications எல்லாவற்றையும் முற்றிலும் Delete செய்யவும்.

3. திருமணத்திற்கென்றே, சிறப்பு மருத்துவ பரிசோதனை இருப்பதால், அதை முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்வது நலம்.

4. பிறருக்கு மரியாதை கொடுக்க, உங்கள் சொந்த வீட்டிலேயே ஆரம்பியுங்கள்..

5. உண்மையாயிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.. கூட்டிக் குறைத்து பேசுவதைத் தவிர்க்கவும்..

6. திருமணத்திற்கு முன்பே, துணைவரிடமோ அவர் குடும்பத்தாரிடமோ, உங்கள் குடும்பத்தையும் அவர் குடும்பத்தையும் ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசுவதோ, உயர்த்தி, தாழ்த்தி பேசுவதோ நல்லது அல்ல..

7. நீங்கள் கட்டப்போகிற குடும்பம் உங்கள் துணைவருடைய குடும்பம் அல்ல.. அல்லது உங்கள் பெற்றோரின் குடும்பமும் அல்ல.. அது உங்கள் இருவருக்கான சிறப்புக் குடும்பம்..

8. வாலிப வயதில், குடிப்பழக்கமோ, புகைப் பழக்கமோ இருந்தால், de-addittion Centre  சென்று அப்பழக்க வழக்கங்களைக் கைவிட்ட பின்பே திருமணம் நடக்க வேண்டும்..

9. குடி, புகை பழக்கம் உடலுக்கும், உறவுக்கும் தாம்பத்தியத்திற்கும் பகையல்லவா..

10. தேவையற்ற (Homo / Lesbian)  நண்பர்களின் பழக்கத்தை விட்டு விடவும். தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது.

11. TV சீரியல் பார்ப்பதும் தேவையற்ற SMS அனுப்புவது போன்ற தவறான பழக்கங்களை திருமணத்திற்கு முன்பே கை கழுவி விடுங்கள்..

12.  “..சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்”


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.