ஜெபம் (பாகம்: 2)
Rev.J.N. Manokaran
Salvation?

தானியேல் மூன்று விதமான ஜெபத்தை பின்பற்றினார்.  அனுதினமும் குறிப்பிட்ட நேரத்தில் தேவனோட தனிப்பட்ட முறையில் ஜெபித்தல் ஒருமுறை.  எனவே இராஜாவை தவிர வேறு எந்த கடவுளையும் வணங்க கூடாது என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் அவர் தன்னுடைய வாடிக்கையின்படி தன் வீட்டில் மேல் அறையில் பலகணிகளை திறந்து ஜெபம் செய்தார்.  இதனால் அவர் சிங்க கெபீயில் போடப்பட்டார்.  தானியேலுக்கு சிறு குழுவாக நண்பர்கள் இருந்தார்கள், அவர்களும் கூடி ஜெபிப்பார்கள்.  இராஜா தன்னுடைய தரிசனத்தையும் அதன் விளக்கத்தையும் ஞானிகள் கூறாததினால் அவர்களை அழிப்பதற்கான உத்தரவை கொடுத்தபோது தானியேல் தன் நண்பர்களுடன் நேரம் எடுத்து ஜெபித்தார். ( தானியேல் 2:17)  தேவன் தானியேலுக்கு அந்த தரிசனத்தையும் அதன் விளக்கத்தையும் தெரியப்படுத்தியதால் தானியேல் இராஜாவின் பார்வையில் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக மாறினார்.  தானியேல் தன்னுடைய சிறு குழு நண்பர்களுடன் சேர்ந்து ஜெபிப்பதன் மூலம் பெலத்தையும் தைரியத்தையும் பெற்றான்.  தானியேல் 9 அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளப்படி தானியேலும் நீண்ட கால உபவாசம் செய்திருகின்றார்.  அந்த காலக்கட்டத்தில் தான் அவர்  இறுதி நாட்களை குறித்தான் வெளிப்பாடுகளை பெற்றிருகின்றார்.
 
எலியாவின் ஜெப மாதிரியானது ஊக்கமுள்ளதும் உடனடியான பதிலை கொண்டு வருகிறதுமாக இருந்தது.  ‘எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.  மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கலனைத் தந்தது”. ( யாக்கோபு 5:17, 18) மழையின் வடிவில் பதில் வரும் வரைக்கும் எலியா ஜெபம் பண்ணினான்.  எலியாவின் வேலைக்காரன் வந்து உள்ளங்கை அளவு மேகம் தெரிகின்றது என்று கூறினான். ஆனால் இவன் தொடர்ந்து ஜெபம் செய்த போது வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று. ( I இராஜா 18:42 - 46)
 
எஸ்தர் பின்பற்றியது மற்றொரு முறையான ஜெபம்.  இஸ்ரவேல் சமுதாயத்தை முழுவதுமாக பூமியிலிருந்து அழித்துவிடும்படி தீட்டப்பட்ட சதி திட்டத்தை கேட்ட போது அவளுக்கு ஆவிக்குரிய ஆதாரங்கள் தேவைப்பட்டது.  அநேக இஸ்ரவேலரின் உபவாச ஜெபத்தின் மூலமாக அவள் பலத்தை பெற்றாள்.  எல்லாரும் சேர்ந்து கூட்டாக செய்த உபவாச ஜெபத்தின் மூலம் எஸ்தர் பெலனடைந்து ஆமானை எதிர்க்கவும் அவனை முறியடிக்கவும், இஸ்ரவேலருக்கு எதிராக தீட்டப்பட்ட திட்டத்தை முறியடிக்கவும் முடிந்தது.  ‘நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து எனக்காக உபவாசம் பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச் சொன்னாள்”. (எஸ்தர் 4:16)  இராஜாவை அணுகின்ற சிறந்த பணியில் ஈடுப்பட்டிருந்த எஸ்தருக்கு ஜெப வீரர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஜெபித்தார்கள்.
 
யோசுவா மற்றொரு ஜெபமாதிரியை தருகின்றான்.  எரிகோ பட்டணத்தை சுற்றிலும் ஆறு நாட்கள் ‘ஜெப நடையை” அவன் ஒழுங்கு செய்தான்.  அங்கிருந்த அனைவருமே அமைதியாக அணிவகுப்பு செய்தனர்.  ஜெப நடையின் மாதிரியானது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அமைதியாக ஜெபிப்பதாகும்.  ஏழாவது நாளில் அவர்கள் ஆர்பரித்து மகிழ்ந்தார்கள், எரிகோ மதிலும் உடைந்தது, அவர்கள் தேவனையும் அருடைய ஜெயத்தையும் கொண்டாடினார்கள்.
 
யோசுவா ஜெபம், ஆராதனை மற்றும் புனிதமாக்குதல் ஃ சமர்ப்பணத்திற்கான ஆவிக்குரிய ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுத்தான்.  ‘யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களை பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்; நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களை செய்வார் என்றான்”. ( யோசுவா 3:5)  தேவன் விசுவாசமுள்ள பக்தியுள்ள மற்றும் பரிசுத்தமானவர்களையே எப்பொழுதும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவார்.  யோசுவா தேவனை ஆராதித்தான்.  கிறிஸ்தவ தலைமைத்துவத்தின் வாழ்க்கை முறையின் ஒரு பங்கு ஆராதனையாக உள்ளது. (யோசுவா 5:14)

ஒரு தலைவரானவர் இந்த காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும்:

1. தாவீதைப் போல் எல்லாம் நன்மைக்கே என்னும் கொள்கை
2. யோனத்தான் அளவுக்கு அன்பு கூற.
3. யோசேப்பைப் போல் தனிப்பட்ட முறையில் பரிசுத்தமாக இருத்தல்.
4. யோசுவாவைப் போல் முடிவோடு இருத்தல்
5. எஸ்தரைப் போல் தைரியமாக இருத்தல்
6. சாலொமோனைப் போல் ஞானமாக இருத்தல்
7. எரேமியாவைப் போல் உணர்வு ரீதியாக உண்மையாக இருத்தல்.
8. நெகேமியாவைப் போல் கொண்டாட்டம் வரை அர்பணிப்புடன் இருத்தல்.
9. பேதுருப் போல் தைரியமாக காரியங்களை ஆரம்பித்தல்
10. பவுலைப் போல் தீவிரமாக, கடுமையாக இருத்தல்


Rev.Manokaran is a gifted Bible Teacher who regularly organizes and conducts programmes and Workshops for Pastors and Chruch Leaders. He could be reached at jnmanokaran@gmail.com.