முதல் வருகையும் இரண்டாம் வருகையும்
Dr. செல்வின்
Researching Bible

2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முதன் முறையாக வந்தபோது மனித கோலத்தை எடுத்து, மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். தாழ்மையின் கோலத்தில் வந்தார். பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்தார். இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தார். மனுஷகுமாரன் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். தம்முடைய வருகையின் நோக்கத்தை விளக்கின ஆண்டவர், "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வந்தேன்" என்றார்.

உலக மக்களுடைய பாவங்களுக்கானப் பிராயச்சித்தம் செய்யும்படியாக சிலுவையிலே பாடுபட்டு மரிக்கும்படியாக இயேசு கிறிஸ்து முதன் முறையாக வந்தார்.
 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையின் காரணமாக நமக்கு பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு கிடைக்கிறது. நீங்கள் ஆண்டவராகிள இயேசு கிறிஸ்துவை சொந்த இராட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? மனந்திரும்பி கிறிஸ்துவுக்குள்ளாக புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறீர்களா?
 
ஆனால் இரண்டாம் முறை வரும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மகிமை பொருந்தின ராஜாவாக, நியாயத் தீர்ப்பு செய்கிறவராய் வரப்போகிறார். வெளிப்படையாக எல்லோரும் பார்க்கும்படியாக வரப்போகிறார்.
 
நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ஆயத்தமாக வாழ்கிறீர்களா?

 


Dr.Selwyn founder of Follow-up Ministries Trust, Oddanchatram ( India ), is a Bible Teacher and author of many christian books. Innovative and simplified bible teaching methods taught by him has helped many christians and non-believers alike to know more about God. He could be reached at 91-4553-240623.