மீண்டும் ஒருமுறை
சகோ. சாம்சன் பால்
Raising Children : Short Story

அந்த மனிதர் தன்னுடைய 21-வது வயதில் தொழிலில் தோல்வியடைந்தார். அந்த தோல்விகளின் பயணம் 49-வது வயதில் அமெரிக்க ஆட்சிக்குழுத் தேர்தலில் தோல்வியடைவது வரை தொடர்ந்தது. இதற்கிடையில் அவர் சந்தித்த தோல்விகள் பல ஆயினும் 52-வது வயதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன். ஒவ்வொரு தோல்வியும் இனிப் போராடுவது அர்த்தமற்றது என்றுதான் அவருக்கு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ தொய்ந்து போகாமல் போராடினார். வெற்றி பெற்றார்.
 
வாழ்க்கை என்பது ஒரே ஒரு வெற்றியோ அல்லது ஒரே ஒரு தோல்வியோ அல்ல. அது பல வெற்றிகளையும், பல தோல்விகளையும் கொண்டது. எனவே தோல்விகள் சில வந்தாலும் வெற்றியைக் கண்டிட இன்னொரு முறை போராட முன் வர வேண்டும்.
 
மோசே எகிப்திய ராஜாவுக்கு எதிராக ஒன்பது முறை போராடித் தோல்வி கண்டான். ஆனாலும் தொடர்ந்து போராடும்படியாக தேவன் அவனை ஏவினார். எனவே 10-வது முறை வெற்றி பெற்றான். "உன்னுடைய முயற்சி வெற்றி பெற்றதா?" என்று கேட்டவருக்கு "இன்னொரு முறை முயற்சி செய்ய வைத்துவிட்டது" என்று பதிலளித்தான் மற்றவன். தோல்வி என்று எடுத்துக் கொள்ளாமல் இன்னுமொரு முறை போராடும் வாய்ப்பாக அவன் அதனை எடுத்துக்கொண்டான்.
 
வாலிப வயதுகளில் தோல்விகள் வரலாம். ஆனாலும் சோர்ந்து மீண்டும் முயற்சிக்க வேண்டும். எதுவரை போராடுவது? தேவன் நம்மை வெற்றியைக் காணச் செய்யும்வரை. தேவனைச் சார்ந்து கொண்டவர்களுக்கு நிச்சயமான வெற்றி வாழ்வு உண்டு. சில தோல்விகளைக் கடந்து அதுவர முடியும்.

தேவனோடு நடக்கத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டவர்கள் கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளிலேயே மனரம்மியமாய் நடப்பார்கள்.
 
அதற்குப்பின் அவள் உங்களைப் போக விடுவான்..   யாத்-11:1


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.