செல்போனிலிருந்து பிள்ளைகளை...
திருமதி ஹெலன் ஜேக்கப்
Reaching out people

கேள்வி-பதில் பகுதி

கேள்வி

டெலிவிஷனும், செல்போன் டெக்ஸ்டிங்கும் இந்த இளைய தலைமுறையை ஈர்த்து அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். என் வீட்டு இரண்டு குழந்தைகள் மத்தியில் இது ஓவர். அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும், இதனால் மாறிக்கொண்டே வருகின்றன.

இவைகளிலிருந்து திசைதிருப்ப வழிகளை சொல்லுங்களேன்.

ரோசலின், சன்னாம்பாடி, இந்தியா.


அன்பு சகோதரி

இளைய தலைமுறையினரை ஈர்த்து கட்டுக்குள் வைத்திருக்கும் டெலிவிஷன் மற்றும் செல்போனிலிருந்து உங்கள் பிள்ளைகளை திசை திருப்ப வழிகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் உங்களை பாராட்டுகிறேன்

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் ( ஈவு) சங்: 127:4, அந்த சுதந்திரம் தேவனுடைய வசனங்கள் வழிகாட்டுவதற்கேற்ப வளர்த்திட வேண்டும் என்ற அக்கறையை பாராட்டுகிறேன்.

இளைய தலைமுறையை மாற்றுவதற்கு முன்னால், பெற்றோராகிய நாம் சில காரியங்களில் மாற வேண்டும்.
1) நாம் டெலிவிஷன் முன்னால் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? என்ன நிகழ்ச்சிகளை பார்க்கிறோம்?
2) நாம் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்கின்றோமா? நம் ஜெப வாழ்க்கை, வேத வாசிப்பு, மற்றவர்களுடன் பழகும் விதம், பேச்சு எல்லாம் நம் பிள்ளைகளுக்கு முன் மாதியாக இருக்கின்றதா?
3) நாம் தொடர்ந்து பிள்ளைகளுக்காக ( தினமும்) ஜெபிக்கின்றோமா?
4) நாம் நம் பிள்ளைகளை வேதாகம் ரீதியில் தொடர்ந்து சிட்சை செய்கிறோமா? அல்லது நம் உணர்ச்சி எப்படி உள்ளதோ அதன் அடிப்படையில் பிள்ளைகளை சிட்சிக்கிறோமா?
5) அவர்களுடன் நேரம் செலவழிக்கிறோமா அல்லது வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை புறக்கணிக்கிறோமா?

அன்பு பெற்றோரே, இப்பொழுதுள்ள தலைமுறையினரை நாம் புரிந்து கொண்டு, அவர்களை தேவனுடைய வழியில் நடத்துவது நமக்கு சவாலான காரியம் தான். ஆனாலும் வேதம் எல்லா காலத்துக்கும் ஏற்றது. நாம் வேதத்தைப் படித்து தேவ ஞானம் பெற்று, நம் பிள்ளைகளுக்கு தேவன் என்ன செய்ய போகிறார் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தேவனிடத்தில் கேட்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பிள்ளையும் மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள்.

பிள்ளைகளை திசை திருப்ப சில வழிகள்.
1) வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடிக்க சொல்லலாம்.
2) விளையாடுவதை உற்சாகப்படுத்தலாம். முடிந்தால் நீங்களும் செர்ந்து விளையாடலாம்.
3)உடற்பயிற்சி, ஒய்வு போன்ற காரியங்களை உற்சாகப்படுத்தலாம்.
4) அவர்களுடைய தாலந்துகளுக்கேற்ப இசைக்கருவி வாசிக்க, பாட்டு கற்றுக் கொள்ள , சொற்பொழிவாற்ற பயிற்சிகள் எடுத்து அவர்கள் தாலந்துகளை வளர்க்கலாம்.
5) புத்தகங்களை படிக்க, தோட்டங்களை பராமரிக்க உற்சாகப் படுத்தலாம்.
6) அவர்கள் நேரத்தை ஞானமாய் பயன்படுத்த சொல்லி கொடுக்கலாம்.
7) Boundaries: அவர்களுக்கு எல்லைகளை நியமிக்கலாம்.உதாரணம்: மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை அவர்களை பாதிக்காத டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு  மேல் செல்போன் பயன்படுத்த கூடாது என்று சில எல்லைகளை அவர்களாகவே முடிவெடுக்க உதவலாம்.


இப்படிக்கு
அன்பு சகோதரி
Y.ஹெலன் ஜேக்கப்
பெண்கள் மற்றும் குடும்ப ஆலோசகர்
YMAM

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)

 


திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர். 'மணக்கும் மணவாழ்வு' என்ற திருமண உறவைப்பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வரும் இவரை 91-979-089-5366 ( இந்தியா ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.