“என்ன விபரீதம்..?!”
திரு. ராஜாசிங்
Reaching out people

கேள்வி-பதில் பகுதி

கேள்வி

அன்பான Aunty,
 
உங்கள் இதழ் எப்போது வரும் என்று காத்துக் கிடப்பவர்களில் நானும் ஒருத்தி, முதலாவது செக் லிஸ்ட் வாசிக்கிறேன். இரண்டாவது கேள்வி பதில் வாசித்து விட்டுத்தான் முதல் பக்கத்திற்கு வருகிறேன். நான் வாசித்து முடித்தவுடன் என் கணவரும் உடனே வாசிக்கிறார். எப்பாடியும் என் அலுவலகத்தில் குறைந்தது 10 பேராவது கேட்டு வாசிக்கிறார்கள்.  உங்களுக்கு என் பாராட்டும் நன்றியும்.
 
எனக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. 5 வயதில் ஒரே ஒரு மகன். என் கணவர் போலீஸ் டிபார்ட்மென்ட். நான் ஒரு பட்டதாரி ஆசிரியை. என் கணவரும் நானும் ஒழுங்காக ஆலயம் செல்லுகிறோம். தேவனுக்கு அடுத்த காரியங்களில் பங்கு கொள்ளுகிறோம். ஆனாலும் என் கணவரின் காரியங்களில் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொண்டு ஆலோசனை பெற வேண்டும் என்று பல வாரங்கள் எண்ணினேன். இப்பொழுது எழுதுகிறேன்.

எனக்கும் என் கணவருக்கும் 7 ஆண்டுகள் வயதில் வித்தியாசம். அன்பானவர். ஆனாலும், இதே பட்டணத்தில் இருக்கும் என் அம்மா அப்பாவைப் போய்ப் பார்த்துவிட்ட வந்துவிட்டால் அன்றைக்க அவர் பண்ணும் ரகளையை என்னால் சகிக்க முடியவில்லை. அவர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றுவிட்டால் இதே நிகழ்ச்சிதான். அன்போடு சனி ஞாயிறு தினங்களில் என் குட்டிப் பையன் டிமியை வீட்டிற்குக் கொண்டுபோய் பின் அழைத்துவந்து விட்டாலும் என் கணவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இது என்ன என்று எனக்குப் புரியவே இல்லை. ஆலோசனை கூறுவீர்களா? என் செல்போன் நம்பரை குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் கண்டிப்பாய் எனக்கு போன் பண்ணவேண்டும்.
 
தங்களின் சகோதரி ரஜீலா பிரேம், கோயம்புத்து}ர்.


புதில்
 
அன்புத்தங்கை ரஜீலாவிற்கு,
  
நேரம் எடுத்து இந்த நீண்ட கடிதத்தை எழுதி அனுப்பினதற்கு எங்கள் வாழ்த்துக்கள். தங்கள் குடும்பம் ஓர் நிறைவான குடும்பம் என்றுதான் நான் நம்புகிறேன். நல்ல கணவர்.. அருமையான ஒரு குழந்தை.. தாங்களும் வேலைக்குச் சென்று வருகிறதினாhல் மனதில் ஒரு நிறைவு உண்டென்று எண்ணுகிறேன். அதன் மத்தியிலும் தாங்கள் சந்தித்து வரும் இந்த விபாPதத்தை நீங்கள் பெரிதாய் எடுக்கக்கூடாதென்று அன்போடு ஞாபகப்படுத்தி என்னுடைய ஆலோசனைகளை எழுதியுள்ளேன்.
 
சில ஆண்கள் திருமணமான பிறகும் தங்கள் சொந்த மனைவியை குழந்தைகளை தங்கள் பெற்றோரை விட அதிகம் நேசிக்கத் தவறுகின்றனர். அத்துடன் இத்தனை ஆண்டுகள் சீராட்டிப் பாராட்டி தனக்கு மனைவியாய்க் கொடுத்த மாமனார் மாமியாரை பெற்றோரைப் போல் நேசிக்கப் பலர் தவறி விடுகின்றனர். இதுதான் இத்தனை விபரீதத்திற்கும் அடித்தளம்.
 
திருமண ஆயத்தத்திலும் திருமண வைபவத்திலும் அதைத் தொடர்ந்தும் ஏதாவது உங்கள் பெற்றோரின் வார்த்தைகள் ஏதாவது அவரைக் காயப்படுத்தியிருக்கிறதா என்பதைக் கண்டுபிடியுங்கள். காயத்தை ஆற்றப் பாருங்கள். ஒரு வேளை நீங்கள் உங்கள் மாமனார் மாமியாரை பெற்றோரை விட அதிகமாய் நேசிக்கிறதை நான் பார்த்திருக்கிறேன். என் கணவருக்கு என்னுடைய அப்பா அம்மா மிகவும் நெருங்கிய நண்பர்கள் போல.
 
வாழ்த்துகிறேன். இந்த விபரீத நிகழ்ச்சி விரைவில் அழகிய, ஆசீர்வாதமான உறவுகளை உருவாக்க உங்களுக்காக ஜெபிக்கிறேன். பயப்பட வேண்டாம். புத்தியுள்ள ஸ்திரியாய் நடந்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் போனில் தொடர்பு கொள்கிறேன்.
  
தங்களின் Aunty,   Dr.மலர்க்கொடி ராஜன் சென்னை

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)

 


திரு. ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.